அல்லது இல்லை
அருந் தவம் ஆய். திரு
அல்லது இல்லை அருந்த அளித்தலால்.
புல்லது இல்லை புனைந்த அற மாட்சியால்.
புல்லது இல்லை புனைந்து அன வாழ்க்கையால். |
அந்நாட்டில்,
அரிய தவம் நடைமுறையாய் அமைந்துள்ளமையால்,
தவம் அல்லாத அவம் இல்லை. எவரும் எவர்க்கும் உண்ண உணவு
அளித்தலால், செல்வம் அல்லாத வறுமை இல்லை. யாவரும் அணிந்துள்ள
அறத்தின் மாட்சியால், அறத்திற்குப் புன்மையான மறம் இல்லை. அழகு
செய்தாற் போன்ற வாழ்க்கையால், அதற்குப் புன்மையான அலங்கோல
வாழ்க்கை இல்லை.
புனைந்த + அற
- 'புனைந்தவற' என வரவேண்டியது 'புனைந்தற'
என நின்றது தொகுத்தல் விகாரம்.
79 |
இருள
கன்றவி ரெல்வினை போலெலா
விருள கன்றவி ரில்வினை யோரெலா
மருள கன்றகைப் பாருமி லாமையா
லருள கன்றகைப் பாரல தில்லையே. |
|
இருள் அகன்று
அவிர் எல் வினை போல், எலா
இருள் அகன்று அவிர் இல் வினையோர் எலாம்,
அருள் அகன்ற கைப்பு ஆரும் இலாமையால்,
அருள் அகன்று அகைப்பார் அலது இல்லையே. |
இருள் நீங்கி
ஒளிரும் பகலவனின் செய்கை போல், எல்லா வகையான
மயக்கமும் நீங்கி விளங்கும் இல்லற வாழ்க்கை கொண்டோர் எல்லோரும்,
அருள் நீங்கிய வெறுப்புணர்வு யாரிடமும் இல்லாமையால், அருள்
விரிவடைந்து எழுச்சி கொள்வாராய் உள்ளனரே அல்லாமல், வேறு வகையார்
அங்கு இல்லை.
80
|
வேயு
முத்தமி டைந்தன வேலிவாய்
வேயு முத்தமி டைந்தன வேலைவாய்
வாயு முத்தம லிந்தன தீங்கழை
வாயு முத்தம லிந்தன வாயெலாம். |
|