பக்கம் எண் :

முதற் காண்டம்623

              குழந்தை நாதனை சூசை துதித்தல்

     - மா, - மா, - - காய், - மா, - மா, - - காய்
 
                    135
விண்ணே புரக்கு மருட்டுஞ்சான் விரிசெவ் விதழ்த்தா
                                 மறைத்தவிசின்
கண்ணே யன்னப் பார்ப்பன்ன கன்னி கரத்திற் றுஞ்சியகா
லுண்ணே ருணர்வுய்த் துயர்வேதத் துரைமந் திரவாய்
                                 மொழித்தவத்தோன்
பண்ணேர் பானேர் மாங்குயினேர் பாடிப் படர்நற் புகழுற்றான்.
 
விண்ணே புரக்கும் அருள் துஞ்சான், விரி செவ் இதழ்த் தாமரைத்
                                    தவிசின்
கண்ணே அன்னப் பார்ப்பு அன்ன, கன்னி கரத்தில் துஞ்சியகால்,
உள் நேர் உணர்வு உய்த்து, உயர் வேதத்து உரை மந்திர வாய்
                                    மொழித் தவத்தோன்,
பண் நேர் பால் நேர் மாங் குயில் நேர் பாடி, படர் நல் புகழ்
                                    உற்றான்:

     விண்ணுலகத்தைக் காத்து ஆளும் கருணைச் செயலில் என்றும்
தூங்காதவனாகிய ஆண்டவன், விரிந்த செந்நிற இதழ்களைக் கொண்ட
தாமரையாகிய மெத்தைமேல் துயிலும் அன்னக் குஞ்சு போலக் கன்னித்
தாயின் கைகளில் தூங்கியபோது, உயர்ந்த வேத மொழிகளை மந்திரமாக
வாயால் எடுத்துக்கூறும் தவத்தோனாகிய சூசை, தன் உள்ளத்திற்
பொருந்திய உணர்வுகளால் உந்தப் பெற்று, வீணை போலவும் பால்
போலவும் மாமரத்துக் குயில் போலவும் பாடி, அக்குழந்தையின் பரந்த
நல்ல புகழைப் பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்:

 
                        136
இருளே யணுகா மறைவணுகா விரவிக் கொளியாந் திருவிழியை
மருளே யணுகா மூடுகின்றான் வானு மண்னும் வழுவாதா
ளருளே மருளா விவ்வுலகிற் கயர்வு மாற வயர்வில்லான்
றெருளே மருளா மனந்துயிலா திளைநான் களிப்பத்
                                    துயில்கின்றான்.