48
|
பூமழைத்
திரளு நாறிய கலவை பொழிதரக் கமழுநீர்த் துவலைத்
தேமழைத் திரளு மாங்குதஞ் சிறுமை தீர்த்தநா தனைப்புகழ்
பவர்வாய்ப்
பாமழைத் திரளுங் கன்னியர் கனியப் பாமழைத் திரளுமெஞ்
ஞான்றும்
மீமழைத் திரளு மெலிதர விம்மி விண்ணுமேற் குளிரநா றினவே. |
|
பூ மழைத் திரளும்,
நாறிய கவலை பொழிதரக் கமழும் நீர்த் துவலைத்
தேம் மழைத் திரளும், ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனைப்
புகழ்பவர் வாய்ப்
பா மழைத் திரளும், கன்னியர் கனியப் பா மழைத் திரளும்
எஞ்ஞான்றும்
மீ மழைத் திரளும் மெலி தர விம்மி, விண்ணும் மேல் குளிர
நாறினவே. |
பூ மழையின்
திரளும், வாசனைக் கலவைச் சுண்ணங்களோடு
சேர்த்துப் பொழிய மணம் கமழும் பன்னீர்த் துளிகளாகிய வாசனை மழைத்
திரளும், அவ்வாலயத்தில் தம் குறைகளைப் போக்கிய ஆண்டவனைப்
புகழ்பவர் வாயினின்று பிறக்கும் பாடலாகிய மழையின் திரளும், கன்னிப்
பெண்கள் கனியப் பாடும் பாட்டாகிய மழையின் திரளும், மேலேயிருந்து
பொழியும் மழையும் மெலியுமாறு மிகுந்து, விண்ணுலகின் மேலிடமும்
குளிருமாறு எந்நாளும் மணம் பரப்பின. விண்ணு - விண் என்பது உகரச்
சாரியை பெற்று விண்ணு என்றாகியது.
49
|
மீமுறை
யொப்ப நாடொறுங் குறையில் வேதிய ரருச்சனை
திருத்து
மாமுறை நலமும் வானொடு வையம் மருளநல் லறநெறி
வழங்கும்
யாமுறை யனைத்து மின்புறக் கண்டா ரிமைப்பில
தயர்வுறு
மல்லாற்
பாமுறை நடத்தித் தொடைச்சரந் தொடுத்துப் பகர்ந்தவை
புகழ்வது
பாலோ. |
|