|
யானையின்
நெற்றியில் அணிந்த நல்ல மணிகள் பதித்த பட்டம்
போல், மலையின் உச்சியினின்று நல்ல மணிகளைக் கொண்ட ஆறு
பாய்ந்தோடுவதும், தன் உச்சியில் நல்ல மலர்களைக் கொண்ட புன்னை
மரங்கள் நிறைந்ததுமான சோலைக்கு அப்பால், வானத்தின் நெற்றியில்
நல்ல திங்கள் அப்பொழுது உதித்தது.
'நெற்றியின்
நன் மலர் நாகக்கா' என மாற்றிக் கூட்டுக. 'மதி' பிறைமதி
என்பது, வரும் பாடலால் அறிக.
| 29 |
உறைகி டந்தவிண்
வேந்துயி ருண்பலென்
றுறைகி டந்தயி லோங்கர சைப்பகைத்
துறைகி டந்தக டற்பறைக் கோர்குணி
லுறைகி டந்தன வொண்பிறை தோற்றமே. |
| |
உறை கிடந்த
விண் வேந்து உயிர் உண்பல் என்று
உறை கிடந்த அயில் ஓங்கு அரசைப் பகைத்து,
உறை கிடந்த கடல் பறைக்கு ஓர் குணில்
உறை கிடந்து அன, ஒண் பிறை தோற்றமே |
ஒளி பொருந்திய
அப்பிறையின் தோற்றம், மழையைக் கொண்டுள்ள
விண்ணுலக வேந்தனாகிய குழந்தை நாதனின் உயிரை உண்பேனென்று
உறைக்குள் கிடந்த வேலை உருவி உயர்த்திய அரசனைப் பகைத்து,
உப்புக்காரம் அமைந்து கிடந்த கடலாகிய பறையை அடித்துப் போர்க்குரல்
எழுப்புவதற்கென்று ஒரு குறுந்தடி வானத்தில் கிடந்ததுபோன்று இருந்தது.
கிடந்த
+ ஆயில் - 'கிடந்தவயில்' என வேண்டியது, 'கிடந்தயில்'
எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.
| 30 |
சிதமி
டைந்தலர்ச் சேடனை யாள்கையிற்
சிதமி டைந்தலர் சேடனை நோக்குபச்
சிதமி டைந்தலர் சேடெனத் தாங்குபற்
சிதமி டைந்தலர் சேடுகண் ணொத்தவே. |
| |
சிதம் மிடைந்த
அலர்ச் சேடு அனையாள் கையில்
சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப,
சிதம் மிடைந்து அலர் சேடு எனத் தாங்கு பல்
சிதம் மிடைந்து, அலர் சேடு கண் ஒத்தவே. |
|