பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்208

                      160
வலமி டத்துறும் விசையொடு வளியென வருமி டத்தெழு
                             மொலியொடு கடலென
நிலமி டத்திடும் வெருவொடு மிடியென நிறைப னித்திடு
                             கணையொடு முகிலெனப்
பலவி டத்திடு கொலையொடு நமனெனப் படைமு கத்திவ
                             ரிருவரு நெடிதமர்
சலமி டத்தடும் வினையென மலிவன சவமி தித்தெழு
                             மலைமிசை மலைகுவார்.
 
"வலம் இடத்து உறும் விசையொடு வளி என, வரும் இடத்து எழும்
                                   ஒலியொடு கடல் என,
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என, நிறை பனித்திடு
                                   கணையொடு முகில் என,
பல இடத்து இடு கொலையொடு நமன் என, படை முகத்து இவர்
                                   இருவரும், நெடிது அமர்,
சலம் இடத்து அடும் வினை என, மலிவன சவம், மிதித்து, எழும்
                                   மலைமிசை, மலைகுவார்.

     "இரு தேர்களும் வலப் பக்கத்தும் இடப் பக்கத்தும் செல்லும்
விசையினால் காற்றுப் போலவும், அவ்வாறு வருமிடத்து எழும் ஓசையால்
கடல் போலவும், இம்மண்ணுலகில் அவை விளைவிக்கும் அச்சத்தால் இடி
போலவும், நிறைவாகப் பொழியும் அம்புகளால் மழை போலவும்,
பலவிடத்தும் விளைவிக்கும் கொலையால் எமன் போலவும், சினத்தோடு
தப்பாது வந்து கொல்லும் தீவினை போலவும், போர்க்களத்தில்
இவ்விருவரும் தாம் கொன்று குவித்த மிகுதியான பிணங்களால் எழும்
மலைமீது மிதித்து நின்று நெடு நேரம் போர் புரிவர்.

                      161
வெளிமு கத்தெழு கணைமழை யிருளிட விளிமு கத்தெழு                                கொடிதொலி செவியட
வளிமு கத்தெழு நதிபதி யலையென வதையு டற்றிய நரபதி
                               யிருவருஞ்
சுளிமு கத்தெழு வயவரு முரிவில துணைய றச்சமர் பொருதலி
                               னொருவன்வந்
திளிமு கத்தெழு சிறைமுரி வனவென விளம திப்பிறை
                               முடியின் னலறினான்.