பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்234

     "பல வகை ஓசைகளும் ஓங்கி நின்ற அடிகளத்தில் நெல்லைப்
பதர் நீக்கித் தெளித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சேதையோனிடம்
சென்ற வானுலகத் தூதுவன், 'உம்மைப் பகைத்த, மாலை அணிந்த
வேலைத் தாங்கிய பகைவரைக் கொல்லும் பொருட்டுக் கொடிய போருக்கு
இசைவாயாக' என்றான். எனவும், 'இந்தப் பேதையாகிய நானோ
பகைவரைப்பெயர்த்துக் கொல்வது?' என்று சேதையோன் ஐயம் கொண்டான்.

     தூது - தூதுவன்: அரசு - அரசன் என்றார் போல. அமைக + என
- 'அமைக வென' என்பது, தொகுத்தல் விகாரமாய் 'அமைகென' என
நின்றது.

                  14
அரிய வோர்தொழி லாண்டவ னேவிய காலை
யுரிய வோர்தக வுளத்திடுந் தகுதியா லூக்கம்
புரிய வோர்மதப் புகர்முக மெனவெழுந் தையம்
பரிய வோர்குலப் படைமுகம் பண்ணுக வென்றான்.
 
"அரிய ஓர் தொழில் ஆண்டவன் ஏவிய காலை,
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால், ஊக்கம்
புரிய, ஓர் மதப் புகர்முகம் என எழுந்து ஐயம்
பரிய, ஓர் குலப் படை முகம் பண்ணுக' என்றான்.

     "வானவன் அவனை நோக்கி, 'அரிய ஒரு தொழிலை ஆண்டவன்
ஏவிய பொழுதே, அதற்கு உரிய ஒரு தகுதியையும் உள்ளத்தில் இட்டு
வைக்கும் தன்மையால், ஊக்கத்தோடு போர் புரிய, ஒரு மத யானைபோல்
எழுந்து, ஐயத்தை அறுத்து, ஒப்பற்ற யூத குலப் படையைத் திரட்டுவாயாக'
என்றான்.

     'ஓர் மதப் புகர்முகம்...என்றான்' என்ற பகுதிக்கு, 'ஒரு மத
யானையைப் போல எழுந்து தன் குலத்தாரைப் படையாகக் கூட்டினான்'
என்ற பழையவுரை மூலத்தோடு முரணுவதாகும். புகர் முகம் - புள்ளி
கொண்ட முகம்: அம்முகம் கொண்ட யானைக்கு ஒரு பெயராயிற்று.

                 15
வேன்மு கந்திவர் வெஞ்சமர்க் கமைகுவ ரென்னா
மீன்மு கந்தொளி விரிமணி முடிப்பல வரச
ரூன்மு கந்தகோட் டுவாப்பரி தேர்பல பண்ணி
நான்மு கந்தரு ஞாலமு நெளிதரத் திரண்டார்.