பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்310

     'உற்றது என்று' என்றவிடத்து, இடையே 'என்ன' என்ற ஒரு சொல்
வருவித்து உரைக்க :

             பட்டுத் தழைத்த மரப் பொருள் விளக்கம்

     - விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா

                    34
எல்லுடைச் சரங்க ளிரவற வெழுதி யிரவிசே ருதயமா
                                 மலைபோன்
றல்லுடைப் பாவ மருளறப் பரம னருளிய சுருதிநூ லுதித்த
செல்லுடை யணிந்தெங் கணும்பெயர் சிறந்த சீனயி மாமலைச்
றொல் லுடைச் சுருதி மாண்பியல் காட்டத் தோன்றிய
                                 தருவிதா மன்னோ.
 
"எல் உடைச் சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதய மாமலை                                                போன்று
அல் உடைப் பாவ மருள் அறப் பரமன் அருளிய சுருதி நூல் உதித்த,
செல் உடை அணிந்த எங்கணும் பெயர் சிறந்த சீனயி மா மலைச்
                                                   சார்பில்,
தொல் உடைச் சுருதி மாண்பு இயல் காட்டத் தோன்றிய தரு இது ஆம்
                                                   மன்னோ.

     "இரவு நீங்குமாறு ஒளி பொருந்திய கதிர்ச் சரங்களைப் பரப்பிக்
கதிரவன் தோன்றும் பெரிய உதயகிரி போன்று, இருள் கொண்ட பாவ
மயக்கம் நீங்குமாறு ஆண்டவன் அருளிய வரி வேத நூல் உதித்த இடமும்,
மேகங்களையே உடையாக அணிந்து எங்கும் பெயர் பெற்றுச் சிறந்ததுமான
சீனயி என்னும் பெருமைக்குரிய மலையின் அருகே, பழமையான வேதத்தின்
மாண்புள்ள இயல்பைக் காட்டுமாறு வந்து தோன்றி மரமாகும் இது.

     'மன்னோ' அசைநிலை.