பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்347

     உலகங்களை ஆண்டு கொண்டிருந்தும், உம்மிடத்து மகனாய்
அவதரித்து வந்து, மிகை என்பதற்கு இடமில்லாத தனது புகழினும்
மிகுதியாக நிலைபெற்ற தயவை விளைவிக்கும் இவன்தான் அவன்!"
என்று சொல்லி, மூவரையும் அவ்வானவர் தொழுதனர்.

                பாலைவனத்து முந்நெறி :

     - விளம், - விளம், - மா, கூவிளம்

             36
தேன்றிறத் தின்னவை செவியிற் கேட்டனர்
வான்றிறத் தின்புறீஇ வைய நாதனென்
றூன்றிறத் திளவலை யாசி யோதினர்
கான்றிறத் தையெழு காதம் போயினர்.
 
தேன் திறத்து இன்னவை செவியிற் கேட்டனர்;
வான் திறத்து இன்பு உறீஇ, வைய நாதன் என்று
ஊன் திறத்து இளவலை ஆசி ஓதினர்;
கான் திறத்து ஐ எழு காதம் போயினர்.

     சூசையும் மரியாளும் தேனின் சுவை போல இவையெல்லாம் செவி
தந்து கேட்டனர்; வானுலகிற்கு உரிய இன்பம் தாம் அடைத்து, ஊனுடல்
கொண்டு உதித்துள்ள சிறுவனை உலக நாதனென்று வாழ்த்துக் கூறினர்;
அப்பாலைவனத்தில் முப்பந்தைந்து காதம் கடந்து போயினர்.

            37
ஐயெழு காவத மேகி யப்புறங்
கையெழு சூலத்துக் கவர்க்கு முந்நெறி
பொய்யெழு வழியெனப் போதல் கண்டுளி
மெய்யெழு மிக்கயேல் விளம்பி னானரோ.
 
ஐ எழு காவதம் ஏகி, அப்புறம்,
கை எழு சூலத்துக் கவர்க்கும் முந்நெறி,
பொய் எழு வழி எனப் போதல் கண்டு உளி,
மெய் எழு மிக்கயேல் விளம்பினான் அரோ :