அவ்வாடை தன்னில்
தோய்ந்த தன்மையால், அந்தத் தடாகத்து
நல்ல நீரை யாரும் உண்ட தன்மையால் கொடிய நோய்கள் யாவும் வாய்ந்த
தன்மையொடு மாறவும் ஆண்டவன் வரம் தந்த தன்மை கொண்டுள்ளது.
அவ்வரம் இன்றும் குறையாது நிலை பெறுகின்றது.
'எஞ்சாது' என்பது,
கடை குறைந்து, 'எஞ்சா' என நின்றது. 'ஈந்த'
என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'ஈய்ந்த' என நின்றது.
22 |
அருளின்
வீங்குவர மஃதென வோர்ந்து
தெருளின் வீங்கிநறு தீங்கய வாவி
சுருளின் வீங்குதிரை சூழ்கரை மோதிப்
பொருளின் வீங்குமடி போற்றுவ போன்றே. |
|
அருளின் வீங்கு
வரம் அஃது என ஓர்ந்து,
தெருளின் வீங்கி, நறு தீம் கய வாவி
சுருளின் வீங்கு திரை சூழ் கரை மோதி,
பொருளின் வீங்கும் அடி போற்றுவ போன்றே. |
நறுமணம் பொருந்திய
இனிய நீருள்ள ஆழமான அத்தடாகம், அது
ஆண்டவன் அருளால் பெருகிய வரமென்று உணர்ந்து, அத்தெளிவினால்
பொங்கி, சுருட்டி எழும் திரைகள் சூழ்ந்துள்ள கரைகளில் மோதின.
அத்தோற்றம், பொன் போல் சிறந்து விளங்கும் அம்மூவர் அடிகளை
அத்திரைகள் போற்றுவது போல் இருந்தது.
'போன்றது'
என்பது, 'போன்று' எனக் கடை குறைந்து நின்றது.
23 |
அலையொ
ருங்குதமு ளாடிய பாலா
லிலையொ ருங்குவிரி யேரல ராடத்
தலையொ ருங்குமிசை தன்கர மேந்து
நிலையொ ருங்குசுனை நீரிய தோற்றம். |
|
அலை ஒருங்கு தமுள்
ஆடிய பாலால்,
இலை ஒருங்கு விரி ஏர் அலர் ஆட,
தலை ஒருங்கு மிசை தன் கரம் ஏந்து
நிலை ஒருங்கு சுனை நீரிய தோற்றம். |
|