பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்536

"கொக்கு அணி முடியும், கொடிச் சடைச் சிரமும், குண்டலச்
                                  செவியும், வெண் பலியை
மிக்கு அணி நுதலும், பொறி அடும் தவத்து மெலிவொடு வாடிய
                                  முகமும்
அக்கு அணி மார்பும், தண்டொடு கரக அம் கையும் - இவற்றொடு
                                  மறையைத்
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி, ஆங்கு
                                  எவரையும் வெல்வேன்.

     "கொக்கு இறகுகளாலான அழகிய முடியும், கொடி கொடியாகத்
தொங்கும் சடை அணிந்த தலையும், குண்டலம் அணிந்த செவியும்,
வெண்ணிறச் சாம்பலை மிகுதியாகப் பூசிய நெற்றியும், ஐம்பொறிகளையும்
அடக்கியாளும் தவத்திற்கு அடையாளமாக மெலிந்து வாடிய முகமும்,
சங்கு மணி மாலை அணிந்த மார்பும், கைத்தண்டோடு கமண்டலம்
தாங்கிய கையுமாய் - இவற்றோடு வேதத்தைத் தொகையாக அணிந்த
கோலம் கொண்ட வரம் பெற்ற முனிவனாக நான் தோன்றி, அங்குள்ள
யாவரையும் வென்று கொள்வேன்.

                     106
தொல்லையி லளித்த தேவரை நீங்கித் தொழுபவோ புதுவிறை                              யென்பே
னெல்லையின் முன்னோ ரொழுகிய நெறியே யிழிவுறும்                              பழுததோ வென்பே
னொல்லையி னெடுநாட் டவப்பயன் பேதை யுரைகள்கேட்                              டொருவவோ வென்பேன்
கொல்லையின் முளைத்த களையெனப் புல்லர் கொடுமுறை                              கொய்மினீ ரென்பேன்.
 
"'தொல்லையில் அளித்த தேவரை நீங்கி, தொழுபவோ புது இறை?'
                                என்பேன்;
'எல்லை இல் முன்னோர் ஒழுகிய நெறியே இழிவு உறும் பழுததோ?'
                                என்பேன்.
'ஒல்லையில், நெடு நாள் தவப் பயன், பேதை உரைகள் கேட்டு,
                                ஒருவவோ?' என்பேன்;
'கொல்லையில் முளைத்த களை என, புல்லர் கொடு முறை, கொய்மின்
                                நீர்' என்பேன்.