4 |
மன்னு
நீருயர் மன்னவர் மூவர்வந் துரைப்ப
மின்னு நீர்நவ மீனுய ருதித்தலும் வேந்த
னென்னு நீருல கினிதளித் தாள்பவன் பிறந்தாங்
குன்னு நீர்கடந் துதித்தலுங் கேட்டுள மருண்டான். |
|
மன்னு
நீர் உயர் மன்னவர் மூவர் வந்து உரைப்ப,
மின்னு நீர் நவ மீன் உயர் உதித்தலும், வேந்தன்
என்னும் நீர் உலகு இனிது அளித்து ஆள்பவன் பிறந்து ஆங்கு உன்னு
நீர் கடந்து உதித்தலும் கேட்டு உளம் மருண்டான்.
|
நிலைபெற்ற
பெருமையால் உயர்ந்த மூவரசர் தன்னிடம் வந்து,
மின்னும் தன்மையுள்ள புதிய விண்மீன் ஒன்று உயர்ந்த வானத்தில்
உதித்ததையும், அரசனென்ற தன்மையால் இவ்வுலகத்தை இனிது காத்து
ஆள்பவன் அங்கே பிறந்து சிந்தனைக்கு எட்டாத தன்மையால்
தோன்றியிருத்தலையும் சொல்லக்கேட்டு எரோதன் மனம் மயங்கினான்.
உன்னு
நீர்மை - சிந்திக்கும் தன்மை சிந்தனை. உன்னு நீர் கடந்து
உதித்தல் - கடவுளும் மனிதனுமாய், கன்னியிடமிருந்து தோன்றினமை.
5 |
மருள்கொ
ணெஞ்சினான் மறைவலோ ரியாரையும் விளித்துத்
தெருள்கொ ணன்மறைச் செப்பமாய்ந் துலகளித் தாள்வோ
னிருள்கொ ளிந்நிலத் தெவ்விடத் துதிக்குவ னென்னா
வெருள்கொ ணெஞ்சற வெத்திலத் துதிக்குவா னென்றார். |
|
மருள் கொள்
நெஞ்சினான் மறைவலோர் யாரையும் விளித்து,
"தெருள் கொள் நன்மறைச் செப்பம் ஆய்ந்து, உலகு அளித்து
ஆள்வோன்
இருள் கொள் இந்நிலத்து எவ்விடத்து உதிக்குவன்?" என்னா,
வெருள் கொள் நெஞ்சு அற, "வெத்திலத்து உதிக்குவான்" என்றார். |
|