பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 627

"செல் நாகம் நீர் பொழிய, தேன் பொழியும் புன்னாகம் திருவின்
                                   பூப்ப,
கல் நாகம் நீர் உமிழ, கவி நாகம் வெருண்டு அஞ்ச, கல் ஊடு
                                   ஊர்ந்த
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட,

                         கொழுஞ் செய் வாய்ப்ப,
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டுப் பொலிவு
                                   இது அன்றோ.


  
   
"வானம் என்னும் நாகம் நீரைப் பொழியவும், தேனைப் பொழியும்
புன்னை மரங்கள் அழகோடு பூக்கவும், மலையாகிய நாகம் மழை நீரை
உமிழவும், அதுகண்டு குரங்காகிய நாகம் மருண்டு அஞ்சவும், மலையின்
ஊடே ஊர்ந்து சென்ற கொல்லும் தன்மையுள்ள நாகப் பாம்பிற்கு ஒப்பாக
மணிகளைக் கரையில் ஒதுக்கியவண்ணம் அருவிபாய்ந்து ஓடவும், அதனால்
கொழுமையான வயல்களில் பயிர் வாய்க்கவுமாகபொன்னுலகத்திற்கு ஒப்பாக
வளரும் புகழ் கொண்ட இத்தாலிய நாட்டின் சிறப்பு இதுவாகும்.

     'அன்றோ' இங்கும், பின்வரும் பாடல்களிலும், அசைநிலை. 'நாகம்'
என்ற பல பொருள் ஒரு சொல், அடைகளின் ஆற்றலால் ஒவ்வொன்றிற்கு
உரியதாயிற்று.

 
                      23
விரைவாய்ப்பூந் தாழையுலாம் வெள்வளைபூ வயலூர்ந்து
                               மிளிர்முத் தீன்ற
கரைவாய்ப்பூஞ் சுனைபூப்பக் கனியாழ்வண் டிமிர்ந்தொகரங்
                               களிகூர்ந் தாடுஞ்
சுரைவாய்ப்பூம் பொழில்காய்ப்ப வீரறமு முச்சீருஞ் சுகமோ
                               ரேழு
நிரைவாய்ப்பூங் குடியாக நிமிரித்தா லியநாட்டு நிலையி
                               தன்றோ.
 
"விரை வாய்ப் பூந் தாழை உலாம் வெள் வளை, பூ வயல் ஊர்ந்து
                         மிளிர் முத்து ஈன்ற
கரை வாய்ப் பூஞ் சுனை பூப்ப, கனி யாழ் வண்டு இமிர்ந்து,
                         ஒகரம் களி கூர்ந்து ஆடும்
கரை வாய்ப் பூம் பொழில் காய்ப்ப, ஈர் அறமும் முச் சீரும் சுகம்
                         ஓர் ஏழும்
நிரை வாய்ப் பூங் குடியாக நிமிர் இத்தாலிய நாட்டு நிலை இது
                         அன்றோ.