பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 673

பண் கடந்து இனிய சொல்லான் பகர்ந்து காட்டிய அக் கோமார்,
கண் கடந்து இயலும் மாமை கண் கடவாமை நோக்கி,
"எண் கடந்து அரிய இன்பம் ஈதி!" என்று அடியைப் போற்றி,
மண் கடந்து அமரர் ஒத்தான், மதுக் கடந்து அலர்ந்த கோலான்.


     
வீணையையும் வென்ற இனிய சொல்லைக் கொண்ட திருமகன்
வாயாற் சொல்லிக் காட்சியாகவும் காட்டிய அவ்வரசர், கண்ணைப் பறித்த
தன்மையாய்க் கொண்டு விளங்கும் அழகை, தேனை அளவில்லாது கொண்டு
மலர்ந்த பூங்கொடியைத் தாங்கிய சூசை கண் கொட்டாமற் பார்த்து,
"எண்ணத்தையெல்லாம் கடந்த அரிய இன்பத்தை எனக்குத் தந்துள்ளாய்!"
என்று கூறி, அத்திருமகன் அடியைப் போற்றி, இம் மண்ணுலகைக் கடந்த
தன்மையால் வானவர்க்கு நிகராயினான்.

     'ஈதி' என்ற எதிர்கால வினைமுற்று, 'ஈவாய்' எனப் பொருள்படுவது,
'ஈந்தாய்' என இறந்த காலப் பொருளதாய் அமைக்கப்பட்டுள்ளது.

 
                    91
கனிவரு மினைய வாகிக், கதங்கொடு கடலுங் காருந்
தொனிவரு முழக்கத் திப்பார் துணுக்கெனப் பிளந்த வாயா
னனிவரும் புகைமொய்த் தெங்கு நடுங்கிருள் பரவச் செந்தீ
முனிவரு நரக பூத முழங்கிமேற் றோன்றிற் றன்றோ.
 

கனி வரும் இனைய ஆகி, கதம் கொடு கடலும் காரும்
தொனி வரும் முழக்கத்து, இப் பார் துணுக்கென, பிளந்த வாயால்
நனி வரும் புகை மொய்த்து, எங்கும் நடுக்கு இருள் பரவ, செந் தீ
முனி வரும் நரக பூதம் முழங்கி மேல் தோன்றிற்று அன்றோ.


     இன்பம் தரும் இவையெல்லாம் நடந்த பின்னர், இவ்வுலகம்
திடுக்கிடுமாறு, கடலும் கருமேகமும் சினங்கொண்டு செய்யும் தொனியைப்
போன்ற முழக்கத்தோடும், தன் பிளந்த வாயினின்று மிகுதியாக வெளிவரும்