அவையடக்கம்
 
 
4சூசை உற்றன வரங்கள்
  தூய் கடல் கடக்கல் இல்லால்,
ஓசை உற்று, ஒழுகு அமிர்தம்
  உடை கடல் என்ன நண்ணிப்,
பூசை உற்று, அதனை நக்கப்
  புக்கு என, உளத்தைத் தூண்டும்
ஆசை உற்று, ஊமன் ஏனும்,
  அரும் கதை அறையல் உற்றேன்.
4
   
 
5முறை அடுத்து அரும் நூலோர், உள்
  மூழ்கிய உவப்பில், அன்ன
துறை அடுத்து அள்ளி உண்ணும்
  துணிவிலான் என்னை நோக்கில்,
“குறை எடுத்தனை,“என்று அன்னார்
  கொடும் சினத்து உறுக்கல் நன்றோ?
பறை எடுத்து, உலகம் கேட்பப்
  பழித்து, எனை நகைத்தல் நன்றோ?
5
   
 
6வண் தமிழ் இனிதின் கேட்ட
  மடக் கிளி, கிளக்கும் புன்சொல்
கொண்டு, உமிழ்ந்து உரைப்ப, நூலோர்
  குறை எனக் கேளார்கொல்லோ?
உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன,
  உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன
பண்டு அமிழ்து உண்டு, யான் புன்
  பாவொடு கக்கக் கேட்பார்.
6