| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 113 |
8 | ‘மாரிபோல் கொடுப்பினும் மந்தனை விட்டுக் கூரிய னுடனே கொடுத்தும் பழகுக’ |
கொடுப்பினும் என்பதனை மந்தனிடத்தும் விடுவோனிடத்தும் ஏற்றுக இன்சொல் சொல்லுதல், பணிதல், உற்றுழி உதவுதல் முதலியன எல்லாம் அடங்கப் பொதுப்படக் ‘கொடுத்து’ என்றாம். ‘அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்’ ந - 45 ‘பிறர்க்குஉரை இடத்தே நூல்கலப்பு ஆகும்’நச் - பாயிரவுரை என்பனவற்றை மாத்திரம் உட்கொண்டு யாவரோடாயினும் பழகற்க என்பது தோன்ற, உயர்வு சிறப்பு உம்மை கொடுத்தாம். [வி-ரை: மந்தனாகிய உடன் பயிலும் நண்பன், இன்சொல் சொல்லுதல், பணிதல், உற்றுழி உதவுதல், மாரிபோலக்கைம்மாறு கருதாமல் கொடுத்தல் முதலியன செய்வான் ஆயினும் அவனை விடுத்து, கூரிய அறிவினனாகிய நண்பனிடம் இன்சொற் கூறிப் பணிவுடன் நடந்து உற்றுழி உதவிக் கொடுத்தும் பழகுதலாலேயே கல்வி நிரம்பும்.] 9 | ‘வேறுஒரு கருமத் தினைமனத்து எண்ணின் ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக’ |
பசிமுதலிய வருத்தத்தாலாவது, சோறு முதலியவற்றின்கண் அவாவினாலாவது, யாதானும் வேறொரு நிமித்தத்தாலாவது கருத்து மயங்கின், அக்கணமே பயிறல் ஒழிந்து தீர்ந்தபின்பு பயில்க. ஆரியனாயினும் எனவே, மாணாக்கர்க்குக் கூறவேண்டா ஆயிற்று. [வி-ரை: வேற்றுச் செய்திகளில் மனம் ஈடுபட்டவிடத்து அது கல்விக்கண் அழுந்தாது ஆதலின், ஆசிரியன்கூட வேற்றுச் செய்தி யீடுபாடு ஏற்படுமிடத்துக் கல்விக்கண் ஈடுபடுதல் கூடாது. அச்செய்தியின் ஈடுபாடு தீர்ந்த பிறகே கல்விக்கண் ஈடுபடுதல் வேண்டும் என்பது. ஆரியன் - வணங்கத்தக்க ஆசிரியன். |