| வேற்றுமையில் - நூற்பா எண். 3,4-5 | 125 |
‘இந்திரன் தாமரையைக் கரத்தால் கொய்து இறைவனுக்குத் தந்து இருங்குற்றத்தின் நீங்கி விண்மேல் இருந்தான் எனலுங் வந்து அருங்காரகம் எல்லாம் பிறர்க்கும் ஓர்வாக்கியத்துள்’ (10) எனக் குறிப்பிட்டுள்ளார். வீரசோழிய நூலாரும் உபகாரகப் படலத்தின் இரண்டாம் காரிகையாக, ‘வரைநின்று இழிந்து அங்கு ஓர்வேதியன் வாவியின்கண்மலிந்த விரைநின்ற பூவைக் கரத்தால் பறித்து விமலனுக்குத் துரைநின்ற தீவினை நீங்க விட்டான் என்று சொல்லுதலும் உரைநின்ற காரகம் ஆறும் பிறக்கும் ஒளியிழையே’ என்றார். ‘நாராயணன்பூ’ என்ற இப்பாடல் நன்னூல் 292 ஆம் நூற்பா உரையில் சிவஞான முனிவரால் எடுத்தாளப்பட்டுள்ளது. 3 வேற்றுமை உருபின் மூவகை 16 | உருபுவேறு உருபு சொல்உருபு என்ன வேற்றுமை உருபு மூன்றுஎன விளம்புவர் |
எ-டு; வாளால் வெட்டினான்; வாளின் வெட்டினான்; வாள்கொண்டு வெட்டினான் எனவரும். [வி-ரை: வாளால் என்புழி, மூன்றன்உருபு தனக்குரிய கருவிப்பொருளில் வந்தது. வாளின் என்புழி, ஐந்தன்உருபு தனக்கு உரிய ஏதுப்பொருளால் மூன்றாவதன் கருவிப்பொருளைச் சுட்டியது. வாள்கொண்டு என்புழி, கொண்டு என்னும் சொல் ஆல் என்ற உருபின் பொருளில் வந்தது. இவை உருபு-வேறு உருபு-சொல்லுருபு என்பனவற்றிற்கு எடுத்துக்காட்டாயின.] 4 உருபுகள் நிற்கும் மூவகைநிலை 17 | அவைதாம், உரிமையாய் நிற்றல் ஒப்பாய் நிற்றல் மாறுபட நிற்றல் எனவழங் குவரே. |
|