பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 22153

மூன்றனுள் கருதப்படுவன

34முதல்துணை ஞாபகம் காரகம் ஏது
வினையே நிமித்தம் வேற்றுமை வினைமுதல்
காலம்ஆ திகளைஇம் மூன்றனுள் கருதுவர்.

[வி-ரை: முதற்காரணம், துணைக்காரணம், ஞாபகஏது, காரகஏது, வினைக்காரணம், நிமித்தகாரணம், வேற்றுமைக் காரணம், வினைமுதற்காரணம், காலக்காரணம் முதலியன மூன்றாம் வேற்றுமைக் கருவிக்கண் அடங்கும்.

மண்ணான் இயன்றகுடம் - மண்முதற்காரணம்; முதற்காரண மாவது காரியத்தோடு தொடர்பு உடையது.

திரிகையான் இயன்றகுடம் - திரிகை துணைக்காரணம்.

முயற்சியிற்பிறத்தலான் ஒலி நிலையாது - பிறத்தல் ஞாபக ஏது; பிறந்த பொருள் எதுவும் நிலைபெறாது என்பது அறிவான் அறிதலின் இது ஞாபகஏது ஆயிற்று.

வாணிகத்தான் ஆயினான் - வாணிகம் காரகஏது; வாணிகம் என்ற தொழில் செல்வத்திற்குக் காரணமாயிற்று. ‘ஆகூழால் தோன்றும் அசைவின்மை’. ஆகூழ் வினைஏது; அசைவின்மைக்கு நல்வினை காரணமாதலின். இனி, சாத்தன் கைஎழுதுமாறு வல்லன்; அதனால் தந்தை உவக்கும் என்புழி, தந்தை உவத்தற்குச் சாத்தன் கை எழுதுமாறு வல்லனாம் வினை காரணமாதலின், சாத்தன் கையெழுதுமாறு வல்லனாதல் வினைக்காரணம் என்பதும் ஆம்.

‘நாணால் உயிரைத் துறப்பர்’ - உயிர் துறத்தல் நாணைக் காத்தற்பொருட்டாதலின், உயிர் துறத்தலுக்கு நாண் நிமித்த காரணம் ஆயிற்று.

குயவனால் குடம் செய்யப்பட்டது என்பதும் அது.

நெய்யால் எரியை அவித்தல்.