பக்கம் எண் :

164இலக்கணக் கொத்து 

‘புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்’                                 கு. 124

தட்டுப்புடைக்கண் வந்தான்;

புல்லுதற்கண் வேர்வை வந்தது;

பொருதற்கண் வேர்வை வந்தது;

சூதாடற்கண் தூக்கம் வந்தது;

-என இருவரின் முடியும் ஒருவினைத்தொழிற் பெயரும் வரும்.+

[வி-ரை: ஒருவனை அரசரோடு கூட்டிப் பின் அவர்களுள் ஏறு என்று பிரித்தலும், அஇஉஒ என்பனவற்றை உயிர்களோடு கூட்டிக் கணக்கிட்டுப் பின் குறில் எனப் பிரித்தலும் கூட்டிப் பிரித்தல் ஆமாறு காண்க. ‘அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை, நின்றாரின் பேதையார் இல்’ - கு. 142 என்ற எடுத்துக்காட்டினையும் பிரயோக விவேகத்துள் (13) காணலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை மக்களிடமிருந்து பிரித்துத் தெய்வத்தோடு சேர்த்தலும், ஒத்தது அறியாதானை உயிருடையாரிடமிருந்து பிரித்துச் செத்தாரோடு சேர்த்தலும் பிரித்துக் கூட்டல் ஆமாறு காண்க.

தட்டுப்புடை - இருவர் செய்யும் போர்.

புல்லுதல் - இருவர் தொழிற்படும் செயல்.

பொருதல், சூதாடல் - ஒருவருக்கு மேற்பட்டவர் தொழிற்படும் செயல்.

புலவி - தலைவன், தலைவியரிடையே நிகழும் கீலாம், புலவி, தட்டுப்புடை, புல்லுதல், பொருதல், சூதாடுதல் என்பன இருவரின் முடியும் ஒருவினைத் தொழிற் பெயராமாறு காண்க.] 30

இடத்திற்குப் புறனடை

43இடத்தின் இலக்கணம் இன்னும் பலவாம்.                     31


+ நன்னூல்301. முனிவர் உரையில் இந்நூற்பாச் செய்திகள் உள.