பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 15, 16215

படுதொகை

79அறுதொகை அறைகுவர் அறிவுடை யார்பலர்
படுதொகை யொடுதொகை ஏழ்என் பார்சிலர்.

[வி-ரை: அறுதொகை - வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி என்பன.]

எ-டு:

போ சாத்தா, செய்குன்று - முதனிலை.

சொல்லுதலால், சொல் - தொழிற்பெயர்.

பால் கறந்தது - முற்று.

உண்ட சோறு - பெயரெச்சம்.

வணிகன் அறிந்து வந்த பொன் - வினையெச்சம்.

- என இவ்வைந்தும் வினையின் தொகை.

போக்கப்படு சாத்தா, செய்யப்பட்டதாகிய குன்று எனவும், சொல்லப்படுதலால் சொல் எனவும், பால் கறக்கப்பட்டது எனவும், உண்ணப்பட்ட சோறு எனவும், வணிகனால் அறியப்பட்டு வந்த பொன் எனவும் முறையே அவ்வைந்திற்கும் படுசொல் தொகாநிலை காண்க.

அறுதொகைக்கு இப்படுதொகை இணையின்று என்பது கருதி அறிவுடையார் சிலர் என்றாம். 15

வினையின் எண்வகை

80தனக்குப் பயனே, பிறர்க்குப் பயனே,
தனக்கும் பிறர்க்கும் சார்இரு பயனே,
தனக்கும் பிறர்க்கும் பயன்சார்பு இலவே,
எனநால் வகையாய் இயன்றே, இவைதாம்
சிற்றறி வோர்வினை, பேரறி வோர்வினை,
எனஇரு கூறாய் எட்டாம் என்பர்.
 

எ-டு:

உண்டான், உடுத்தான், உறங்கினான் - தனக்குப் பயன்.

பாங்கன் தூது நடந்தான்;