1 | மனம்மொழி மெய்அறிவு ஆகிய நான்கன் அசைவே ஆகியும் அவ்வசைவு இன்றியும்
|
எ-டு: நினைத்தான், உரைத்தான், நடந்தான், அறிந்தான் - இந்நான்கும் முறையே மனம் முதலியவற்றின் அசைந்தவினை. இவற்றைத் தமிழ் நூலார் ஒரு பொருளின் புடைப்பெயர்ச்சி என்று வழங்குவர். ‘அறிவு இறந்து அங்கு அறிந்திடீர் செறிந்த துகள் அகற்றிடீரே’ இதுபோல்வன எல்லாம் அறிவு முதலியவற்றைக் கடத்தலின் அசைவற்ற வினை. இதனை வடநூலார் பரவசம் என்று வழங்குவர். இவ்வைந்தனுள் (அசைந்த வினை நான்கு, அசையாவினை ஒன்று) அசைவற்ற வினை என்பது ஒன்றில்லை, ஏனை நான்கே வினை என்பாம், அந்நான்கனுள்ளும் அறிவு அசைந்த வினை என்பது ஒன்றில்லை, ஏனை மூன்றே வினை என்பாரும், மூன்று என்று வரையறை இல்லை, உலகத்துப் பல பொருள்களினுடைய அசைவு ஒன்றுமே வினை ஆதலால் ஒன்றே வினை என்பாரும், தீக்குச் சூடு போலப் பொருட் குணமே அன்றி வினை என்பது ஒன்று இல்லை என்பாரும், இன்னும் பலவாறு உரைப்பாரும் உளர். அவை எல்லாம் விரிக்கின் பெருகும். 2 | நல்வினை தீவினை வெறுவினை என நடந்து
|
நல்வினை - தீவினை வெளி. [நல்வினை அறம் செய்தல் முதலியன; தீவினை நன்றிகோறல் முதலியன.] வெறுவினையாவது இருவினையினுட் படாது வருவது; எ-டு: கையை நொடித்தான்; காலை நெட்டிவிட்டான்; மூச்சு விட்டான்; உறுப்பழுக்கை உருட்டி உதிர்த்தான்; |