உட்கொண்டதற்கு மாறாக ‘வினைமுற்றே வினையெச்சமாகும்’ என்றார். இச்செயல் உயிர்க்குணமாகிய மறவியான் நிகழ்ந்தது என வழுவமைத்தார் இவ்வாசிரியர். ‘இரும்பார்க்குங் காலராய், ஏதிலார்க்கு ஆளாய்’ சேனைத் தலைவராய்’ என்பனபோலக் ‘கருநாய் கவர்ந்த காலராய், சிதகியபானையராய்’ என நின்றன கெடுதல் விகாரப்பட்டுக் காலர் பானையர் என நின்றன என்பார் வினையெச்சம் வினைமுற்றாய்த் திரியும் என்னும் ஒரு சாரார். வினைமுற்றே வினையெச்சமாய்த் திரியும் என்னும் ஒரு சாரார் காலர் பானையர் என்பன இயற்கையான முற்றுக்கள் ஆதலின், இவற்றை வினையெச்சமாக்க ஆய் என்னும் மொழி வருவிக்க வேண்டும் என்பர். கெடுதல்விகாரமாவது மொழி வருவித்தற்கு முன்பு பொருள் முடியாது கிடப்பது: மொழிவருவித்தலாவது - மொழி வருவித்தற்கு முன்பும் சொல்லும் பொருளும் முடிந்து கிடக்கும் நிலைக்கண்ணேயே என்க. மொழி வருவித்தல் தெளிவிற்கும் விளக்கத்திற்குமே. ‘கருநாய் கவர்ந்த காலர் சிதகிய பானையர்’ மொழி வருவித்தற்கு முன் பொருள்முடியாது தனித்தனித் தொடராக இருத்தலின், இதற்கு மொழி வருவித்தே ஒரு தொடராக்கவேண்டுதலின், இதனைக் கெடுதல் விகாரமாகக் கோடலே ஏற்புடைத்து. ‘கருநாய் கவர்ந்த காலர் சிதகிய பானையர் பெருநாடுகாண இம்மையிலே பிச்சை தானும் கொள்வர்' என்பதனை ‘இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்’ ‘சேனைத்தலைவராய்’ என்னும் பாட்டுக்கள்போல ஆய் என்னும் ஆக்கம் கொடுத்து விரவாவினையெச்சமாக்குவர். இவ்வினை யெச்சங் களை வினையடை என்பர்’’ - பி. வி. 39. உரை. பிரயோகவிவேக ஆசிரியரும் நச்சினார்கினியரைப் பின் பற்றி வினையெச்சமே வினைமுற்றாகும் என்னும் கருத்தினர் என்பது கொள்க. ‘துணைவினை முற்றுமாய்ச் சிறக்கும்’ - பி. வி. 39] 3 |