| ஒழிபியல் - நூற்பா எண். 9, 10 | 263 |
தொகைநிலை, தொகாநிலை - பொதுக்கருத்து 95 | தொகைநிலை தொகாநிலை எனும்சொற் பொருளான் மாறுபடு புலவர்கள் மூவர்கள் என்க.
|
தொகைநிலை நிலைமொழி வருமொழிக்கிடையே மறைந்து நிற்றல், தொகாநிலை வெளிப்படநிற்றல் என்றும்; தொகாநிலை நிலைமொழி வருமொழிகள் கூடி நிற்றல், தொகாநிலை பிரிந்து நிற்றல் என்றும்; தொகைநிலை நிலைமொழி வருமொழிகள் ஒன்றாய் நிற்றல், தொகாநிலை பலவாய் நிற்றல் என்றும் பொருள்கூறி ஒருவரை ஒருவர் மறுப்பர். அவை விரிக்கின் பெருகும். இது பொது. வருவது சிறப்பு. 9 தொகைநிலை, தொகாநிலை -மூவகை விளக்கம் 96 | தொகைநிலைக் குணத்தைச் சொல்லுங்காலை வேற்றுமை உருபு முதலிய இடைநிலை தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்,1 நிலைமொழி வருமொழி நீக்கம் இன்றி ஈறும் முதலும் இசைந்து நின்று விட்டிசைப்பு இன்றி ஓர் நிலைமொழி விதிபெறத் தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்,2 பலசொல் கூடி ஓர் சொல்லே யாகிப் பிளவுபட்டு இசைக்கவும் பிரிக்கவும் படாமல் ஈறும் முதலும் இவை எனப் படாமல் தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்,3 கூறுவர்; தொகாநிலை கூறுங் காலை, உருபு முதலிய இடையே உரைத்தல், விட்டிசைத்து உரைத்தல், வெவ்வேறு உரைத்தல், என்றே கூறுவர்; இவர்மதம் மறுபடா.
| |
எ-டு: 1. நூல் கற்றான் - இது உருபு தொக்கு நின்றது; நூலைக் கற்றான் - இது உருபு விரிந்து நின்றது.
|