பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 10, 11265

[வி-ரை: உருபு முதலிய தொகுதலின் தொகை, உருபு முதலிய விரிந்தும் இரண்டு முதலிய சொற்கள் ஒட்டி ஒருசொல் நீர்மைப்படுதலின் தொகை, உருபு விரியாது இரண்டு முதலிய சொற்கள் ஒட்டி ஒருசொல் நீர்மைப்படுதலின் தொகை என்ற முக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியர் முதலாயினார் முதற் கருத்தினர். சேனாவரையர் பிரயோக விவேக நூலார் முதலாயினார் மூன்றாங் கருத்தினர்.] 10

தொகையுள் தொகுக்கப்படும் நிலை

97அறுவகைத் தொகையும் அறையுங் காலை
ஒன்றே தொகுதலும்1 பலவே தொகுதலும்2
ஆறு வகையும் அடங்கத் தொகுதலும்3
உருபே தொகுதலும்4 பொருளே தொகுதலும்5
உருபும் பொருளும் ஒருங்கே தொகுதலும்6
உருபும் பொருளும் ஒருங்குபல தொகுதலும்7
பொருளும் உருபும் பொருளும் தொகுதலும்8
முதல்இடை கடைஎன மூன்றினுந் தொகுதலும்9
கடைஇடை இரண்டினும் காணத் தொகுதலும்10
ஆதியாப் பலவும் அறைந்தனர் புலவர்.
 

எ-டு:

1. ‘மரம் வெட்டினான்’ - உருபு ஒன்றே தொக்கது.

2. ‘குன்றி கோபம் கொடிவிடு பவளம்
ஒண்செங் காந்தன் ஒக்கும் நின்நிறம்’

என்புழி ஐ-உருபும் உம்மையும் தொக்கன.

3. துடியிடை நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி - என்புழி ஆறும் தொக்கன.

[வி-ரை: துடியிடை - உவமத்தொகை; நெடுங்கண் - பண்புத்தொகை; துணைமுலை - வினைத்தொகை; பொற்றொடி - அடிப்படையில் வேற்றுமைத்தொகை; போந்த பொருளில் அன்மொழித்தொகை. துடியிடை நெடுங்கண் துணைமுலை உம்மைத்தொகை. துணைமுலைப்பொற்றொடி - வேற்றுமைத் தொகை - இவ்வாறு ஆறும் கொள்க.]