பக்கம் எண் :

272இலக்கணக் கொத்து 

ஆறாகும். (பி. வி. 20) இவற்றுள் எண்ணொடு பெயர் புணர்ந்த எண்தொகை தமிழில் பண்புத்தொகைக்கண் அடங்கும். (மூவேந்தர், இருகண்) முன்னும் பின்னும் மொழி அடுத்து வரும் இடைச்சொல் தொகை தமிழில் வாள்மன், கொன்னூர் என்பன போல இடைச்சொல் தொடராய் அடங்கும்.

தமிழில் காணப்படும் வினைத்தொகையும், உவமத் தொகையும் வடமொழியில் கூறப்படவில்லை. அவையும் சில பெயரெச்சமும் வண்ணச்சினைச்சொல்லும் வடமொழியில் பண்புத் தொகை எனக் கூறப்படுகின்றன. பெயரெச்சம் தமிழில் பெயரெச்சத் தொடர். அது தொகின் வினைத்தொகை ஆகும் (கொல்லும் யானை - கொல் யானை) வண்ணச்சினைச் சொல்லுள் வண்ணமும் சினையும் பண்புத் தொகையாகத் தொகும். (செங்கால்) சினையும் முதலும் வேற்றுமைத் தொகையாகத் தொகும். (கால்நாரை.)

‘அறச்சுற்றம், அருட்சுற்றம், கல்விப் பொருள் என்றும், வடமொழியில் விநயதனம் குணபுத்தி சுசிர்தபெந்து என்றும், முன்மொழி எண்ணம் என்னும் சம்பாவனா பூர்வபதம் வரும். இவையே துணியப்படும் காலத்துத் தேற்றம் என்னும் அவதாரண பூர்வபத கருமதாரயனாம். திருவள்ளுவரும், தொல்காப்பியரும், ‘எண்ணித் துணிக கருமம்’ (கு. 467) எனவும். ‘ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்’ (தொ. சொ. 337) எனவும் கூறினாராதலின், ஒரு பொருளை எண்ணும் பொழுது ஒன்றாகவும் துணியும் பொழுது வேறொன்றாகவும் காண்க;

ஆண்டகை, பெண்டகை, மக்கட்சுட்டு இவை பின்மொழி ஆகுபெயராய் நின்ற இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்; மக்கட்சுட்டு என்பதனைக் கல்லாடரும் பின்மொழி ஆகுபெயராய் நின்ற இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்பர். அதனைச் சேனாவரையர் அன்மொழித் தொகை என்பர்.

கருஷ பாஷாணம், கருஷோபலம் - இவை உறைகல் என்னும் வினைத்தொகையாம். அதனை வடநூலார் இடம் உணர்த்தும் வினைப்பெயர் என்பர்.’’ - பி.வி. 22 உரை.