பக்கம் எண் :

274இலக்கணக் கொத்து 

இன்மை பற்றி வரும் உபசர்க்கம்

101அவற்றுள் இன்மை ஐவகை ஆகும்.

அவை சிவஞான சித்தியாரின் அபாவ அளவையுள்ளும் தண்டியலங்காரத்துள் அபாவவிரிச் சூத்திரத்துள்ளும் காண்க. ஆயின் வடமொழி இலக்கணத்தை இங்ஙனம் விரிக்கின் பயன் என் எனின்,

‘இல்லென் கிளவி இன்மை செப்பின்’                            - தொ. எ. 372

‘இல்லென் இன்மைச் சொற்கு ஐ அடைய'                             - ந. 233

‘இல்பொருள் உவமை’                                                தண்டி.

எனவும்,

அல்வழி, அஃறிணை, அவனல்லன், குற்றியல்லன் மகன்,
மகனன்று குற்றி. ‘இருதிறன் அறிவுளது இரண்டலால்
ஆன்மா’ ‘இருதிறன் அல்லது சிவசத்தாமென’

எனவும்,

‘கோளில் பொறி’ (கு. 6) ‘பயனில் சொல்’                             - கு. 196.

எனவும் முறையே அம்மூன்றனையும் முற்காலத்தார் மொழி பெயர்த்துத் தமிழிற்குரிய இலக்கண இலக்கியம் ஆக்கினர். அன்றியும், பிற்காலத்தார்,

‘நேர்ந்த மொழிப் பொருளை நீக்கவரும் நகரம்’                      - நே.எ. 11

‘என்றும் அபாவமும் இல்லதன் அபாவமும்’                           தண்டி 91

‘அபாவம் பொருள்ஒப்பு ஆறு என்பர்’                              -சி.சி.பா. 7

என்றும்,

‘அத்துவிதம் ஒன்றையும் ஆங்கு’

‘அநாதி முத்த சித்துரு’                                       -சி.சி.சு. 1 சூ. 18

‘அபேதப் பிறப்பிலதாய்’

எனவும் மொழிபெயராமலே தமிழ்க்குரிய இலக்கண இலக்கிய மாக்கினர். ஆகையால் அம்மூன்றனையும் அவற்றுள் ஒன்றான ஐந்தனையும் விரித்து அறியாக்கால், தமிழ் இலக்கண இலக்கியங்கட்குப் பொருள் கொள்ளக்கூடாது. பொருள்கொள்ளும் கருவியாய் விரித்ததனால், மிகவும் பயனுண்டே என்க.