பக்கம் எண் :

136இலக்கணக் கொத்து 

7பெயர்ப்பின் விகுதி பெறுதலே

இனி, இறைவன்கடியன், காக்கும்; தையலாள் வரும்; உமையாள் அமர்ந்து விளங்கும்; கோன் வந்தான்; கோக்கள் வந்தார்; மரமது வளர்ந்தது; மரங்கள் வளர்ந்தன - இவ்விகுதிகளே உருபு என்க. இவ்வுருபுகளைத் தொகுத்தும் அறிக.

[வி-ரை: அன், ஆள், ன், கள், அது என்ற விகுதிகள் பெயருக்குப் பின்வருதலே முதல் வேற்றுமை உருபு என்பர்.

‘கூறிய சொற்பின் பொருள்மாத்திரத்தில் குலவு எழுவாய்
வீறுடை வேற்றுமை எய்தும்; ஒருவன் ஒருத்திஒன்றில்
ஏறிய சு-பல வில்சு-வும் கள்ளும் எங்கும் அழியும்சு-’                  - வீர. 33

என வீரசோழியம், ஒருமைப் பெயரின்பின் சு-என்ற உருபும், பன்மைப் பெயரின்பின் சு-கள் என்ற ஈர் உருபுகளும் வரும் எனவும், சு என்ற உருபு எப்பொழுதும் ஏறி நீங்கும் எனவும் குறிப்பிடும்; மேலும்

‘முதல்சு, மருவும்அர் ஆர், அர்கள் ஆர்கள் மார்
முதல் வேற்றுமையின் உருவம்’                                     - வீர. 30

என்பதனால், சு-அர்-ஆர்-அர்கள்-ஆர்கள்-மார் என்பனவும் முதல் வேற்றுமை உருபுகளாம் என்ற கருத்தையும் தெரிவிக்கும்.

பிரயோக விவேக நூலார் ஏழாம் காரிகையுரையில், ‘இறை, உமை, தையல், கோ, வேள், பெண்டு, நாய், நரி, நிலம், நீர் என்னும் பெயர்ப் பகாப்பதங்களைப் பிராதிபதிகம் என்றும், அவை பிராதிபதிகம் ஆவதன்றி முதல் வேற்றுமை உருபு பெற்றன அல்ல என்றும், அவை எழுவாய் ஆகா என்றும், பின்னர் அன் அர், ஆள், ஆர், கள் என்னும் பிரதமா விபத்தியாகிய முதல் வேற்றுமை உருபோடு புணர்ந்து இறைவன், இறைவர், உமையாள், தையலாள், தையலார் எனநிற்கும் என்றும், இறைகடியன் இறைகாக்கும் - உமையமர்ந்து விளங்கும் - தையல்வரும் என அன் ஈறும் ஆள் ஈறும் பெறாது நின்றவற்றை, அன் ஈறு ஆள் ஈறு என்னும் சுப்பிரத்தியயம் முதலாயின வந்து லோபமாயின என்றும் கூறுவர். அன்றியும், கோ-வேள்-பெண்டு என்னும்