பக்கம் எண் :

140இலக்கணக் கொத்து 

இன்றாகிய வடமொழி இலக்கணம் தமிழில் வருதலானும், எழுவாய்உருபும் வடமொழியிற்கண்டு இன்று கொண்டுவந்தது என்றலும் ஒன்று. இக்கருத்து,

‘தரங்கக்கும் வண்ணகக்கும் தரவாவது’ (யா. கா. 56) என்றும், வாழ்வாவது மாயம்’ (சு. தே.) என்றும், ‘அறமாவது ஈதல்’ என்றும், மூவகைச் செய்யுளாலும் அறிக.

‘வடமொழி எழுவாய்க்கு உருபுமூன்று அவைதாம்
விரியவும் தொகவும் விரும்பும் என்ப’

இஃது உரைச்சூத்திரம்.

இவ்வெண்விதியோடு எழுந்த சூத்திரம் பிறர்மதம் கூறலேயாம்; தன் துணிபு உரைத்ததன்று, இவ்வெண்மரும் தம்முள் மறுப்பர்; அவை விரிக்கின் பெருகும்.

[வி-ரை: ஆனவன் முதலிய சொற்கள் எழுவாய் உருபு எனப் பெயர் பெறாவிடினும் பண்டுதொட்டே வழக்கத்தில் இருக்கும் சொற்களேயாம். அதனால் அவை ஏற்றுக்கொள்ளத் தக்கன. மேனும்

‘கடிசொல் இல்லை காலத்துப் படினே’

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே’

என்ற நூற்பாக்களான், புதிய சொற்களைப் படைத்துக் கோடலும் ஏற்புடைத்தாகின்றது.

‘தெங்குநீண்டு ஈற்றுஉயிர் மெய்கெடும் காய்வரின்’

என்ற நூற்பாவினால் தெங்கு + காய் = தேங்காய் எனவும் அமைதல் கொள்ளப்பட்டமை புதியது புகுதலாம். தெங்கின்காய், தெங்கங்காய் என்பனவே பழைய முடிபு.

வடமொழியில் எழுவாய்உருபு இருப்பதுகொண்டு, தமிழிலும் வடமொழி இலக்கணம் கலந்து வருதலின் தமிழிற்கும் எழுவாய்உருபு கொள்ளுதலும் அமையும்.