பக்கம் எண் :

42இலக்கணக் கொத்து 

விசாகநாளில் பிறந்தவன் விசாகன்;

அம்பலத்தில் ஆடினவன் அம்பலவன்.                                    - 122 உரை

வீட்டை அறிவிக்கும் மகனைக் கடவுள் என்று துணிந்து அவன் கருத்தின்வழியே நிற்றல்.

சொக்கலிங்கம்,

அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்.                                      - 122 உரை

தவரடி புனைந்த தலைமையோன்.                                          - 129 உரை

சிவனுடைய சீர்பாத ஞானமானது ஆன்மாவினுடைய ஞானத்தின் கண்ணே கலக்கும்.

நித்தியம் நைமித்தியம் காமியம் முதலிய விரதங்களால் உடன்பட்டுப் பயிறல் ஒழியின் அளவுபட்ட துன்பம்                                                                      - 129 உரை.

இவ்வெடுத்துக்காட்டுக்கள், விரதநெறி தவறாது சிவபெருமானிடம் பத்திபூண்டு வீடுபேற்றுக்கு முயன்ற இவ்வாசிரியர், அருமையாம் விதிகள் வழிவழிநின்று வழங்குதற் பொருட்டே, இக் கருவிநூல் யாத்த செயலைப் புலப்படுக்கின்றன.

பலரும் உணரும் பொருட்டு உலக வழக்கிலிருந்தே எடுத்துக் காட்டுக்களை உரைநடையில் குறிப்பிடும் இவ்வுரையில், யாவரும் தெளிவாக உணரும் வண்ணம் உவமைகள் சில எடுத்தாளப் பட்டுள்ளன.

சொல் ‘‘அர்த்தநாரீசுரன்’, போல வேற்றுமைக்கும் ஒற்று மைக்கும் பொது.         - 6 உரை.

சொல், பொருள், சொற்கூட்டம், பொருட்கூட்டம் இவற்றை அளவிடல் அரிது; இவற்றுள் ஒன்றை மாத்திரமும் அளவிடல் அரிது என்ப. ஆயின், நூல்களால் பயன் என்னையெனின்,

‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நானாழி’

இவ்வுவமையால் பயன் உண்டு என்று தெளிக.                               - 6 உரை