பக்கம் எண் :

 உரை நலன்கள்45

அவத்தை வயத்தால் அலைதல்:

நனவின் அறிந்ததைக் கனவிலும், கனவினறிந்ததை நனவிலும் மயங்கியும், நனவினுள்ளும் பிரேரகத்தில் அறிந்ததைச் சாக்கிரத்தில் மயங்கியும், சாக்கிரத்தின் அறிந்ததைப் பிரேரகத்தின் மயங்கியும், பிரேரகத்தினுள்ளும் தனக்குரிய யாதானுமொரு மணிப்பொற்பணியை யாதானுமொரு காரணத்தால் பிறனொருவன் கையில் கொடுத்துப்போக்கி, சிலபொழுது இடையிட்டு அவன் கொண்டுவந்து தர வாங்கிப் பார்த்து, ‘அதுவோ வேறொன்றோ’ என்னும் ஐயம் தீர்ந்து, சிலர்க்கு அறிவித்துச் சேமத்தின்கண்ணே வைத்து, சிலபொழுது இடையிட்டு அவனைக் கண்டு ‘அப்பணி தருவாயாக’ என்று பகைகொண்டு, சிலபொழுது இடையிட்டு அப்பணியைக் கண்டு, தெளிந்து பகை தீர்ந்தான் - இவை போல்வன அவத்தை வயத்தால் அலைதல்.                                                        - 6 உரை

உபலக்கணமாவது:

‘அஇ உ - முதல் தனிவரின் சுட்டே’                                         நன். 66

என்புழி, முதற்கூடிவரின் சுட்டே என்றும் பொருள் கொள்ளுதல். இவ்விலக்கணம் நோக்காது, தனித்து நிற்பின் சுட்டோ, கூடி நிற்பின் சுட்டு அன்றோ’ என்று கருதி, நன்னூலார்க்குப் பின்னூலார் இச்சூத்திரத்திற்கு அளவிறந்த குற்றம் கூறினர், அது நிற்க. அவர் எழுத்திற்குப் பெயரிடுதல் நோக்கியும்,

‘எகரவினா முச்சுட்டின் முன்னர்’ நன். 163

எனச் சந்தி நோக்கியும்,

‘இவை அடைசுட்டு வினா’ நன். 276

எனப் பெயரிடுதல் நோக்கியும்,

‘தூக்கிற் சுட்டு நீளின்’ நன். 163

என யாப்பு நோக்கியும் இங்ஙனம் கூறிப் பின்,

‘சுட்டியா எகரவினா வழி’ நன். 106

வினைத்தொகை சுட்டீறு ஆகும் உகரம், நன், 179