பக்கம் எண் :

56இலக்கணக் கொத்து 

வேற்றுமை - அல்வழி - பொதுவழியுள் அடங்காச்சந்தி: 118

எ-டு; பொருபடை, கருங்குதிரை, படைபடை, பஃபத்து, வயிறு மொடுமொடென்றது, முன்றில், முயற்கோடு, சாத்தன் சோற்றைப் பகற்கண்பசித்து விருந்தோடு உண்டான் போல்வன. - 118 உரை

பொதுஇடம் என்பதன் விளக்கம்: 118

இவன் சொன்னசொல் என்பது தன்மைக்கும் முன்னிலைக்கும் படர்க்கைக்கும் பொதுவிடம். தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மையும், முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலையும் பொது இடம் என்றலும் ஒன்று.

ஒருதொடர்-பலதொடர்-விளக்கம்: 124

எ-டு:சாத்தன் அரிசி நெல் பயறு முதலானவை கொண்டு வந்தான்; கொற்றன் பூ இலை காய் பழம் முதலானவை கொண்டு வந்தான்; தேவன் மிளகு புளி கடுகு முதலானவை கொண்டு வந்தான்; பூதன் சீலை தாலி பூண் அணி முதலானவை கொண்டு வந்தான்; அரசன் அக்காலத்து அமைச்சொடு வந்தான்; தலைவன் தலைவிக்குத் தாலி கட்டினான் - இப்பல தொடர்களுள் வரைதல் என்னும் பல பொருட்கண்ணே வருதலின், ஒரு தொடரேயாம். அங்ஙனம் ஆகுதல், வந்தான் என்னும் ஐந்து முற்றையும் செய என் எச்சமாக்கி நோக்குக.

சாத்தனை வரைவிற்கு வடக்கனுப்பினான்; கொற்றனை இழவுக்குக் கிழக்குப்போக்கினான்; தேவனை நெற்கொள்ளத் தெற்கே ஏவினான்; பூதனைத் தேன் விற்க மேற்கே செலுத்தினான் - இவையெல்லாம் ஒருவன் வினையேயாயினும் ஒன்றற்கொன்று மறையாகப் பொருத்தம் இன்மையால் பல தொடரேயாம். - 124 உரை

பொருட்டிரிபு என்பதன் விளக்கம்: 125

பொருட்டிரிபாவது மாவினது வெண்பூப் பசுங்காயாயிற்று, களாவினது பசுங்காய் கருங்கனியாயிற்று, மயிரினது கருமை
வெண்மையாயிற்று, பாலினது இனிமை புளிப்பாயிற்று என்பன போல்வன. - 125 உரை