பக்கம் எண் :

264இலக்கணக் கொத்து 

2. சூரனைவென்றான் வந்தான் என்புழிச் சூரனைவென்றான் என்னும் பதம், நிலைமொழி வருமொழி நீக்கமின்மை முதலிய இலக்கணங்களைப் பெற்றுத் தொக்கு ஒரு நிலைமொழியாயே நின்றது.

முருகன் சூரனை வென்றான் என்புழிச் சூரனை, வென்றான் என்னும் பதங்கள் விட்டிசைக்கப்பட்டு மூன்றாக நின்றன.

3‘ஒருகோட்டு இருசெவி முக்கண் நால்வாயன்’
‘உல்லாச நிராகுல யோகவிதச்சல்லாப விநோதன்’
‘துடியிடை நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி’

மன்னகுமாரன், சங்கபடகம், வட்டவள்ளம், பவளவாய், கமல பாதம் இவை பல சொல்கூடி ஒரு சொல்லாதல் முதலிய இலக்கணங்களைப் பெற்றுத் தொக்கு ஒருசொல்லாயே நின்றன.

‘ஒருகோட்டன் இருசெவியன் முக்கண்ணன்
நால்வாயன்’                                       - சி. சி. சு. வி. வணக்கம்.

எனவும்,

உல்லாசன் நிராகுலன் யோகவிதன் சல்லாபன் விநோதன் எனவும்,

துடியிடையாள் நெடுங்கண்ணாள் துணைமுலையாள் பொற்றொடியாள் எனவும்,

மன்னன் குமாரன் எனவும்,

சங்கம் படகம் எனவும்,

வட்டம் வள்ளம் எனவும்,

பவளம் வாய் எனவும்,

கமலம் பாதம் எனவும்

வெவ்வேறாய்ப் பிரிக்கப்பட்டு பிளந்திசைக்கப்பட்டு ஈறும் முதலும் இவை எனத் துணியப்பட்டுப் பல பெயராயே நின்றன.

இம்மூவரும் ஒருவர்க்கு ஒருவர் எளியர் அல்லர், அதனால் மதம் மறுபடா என்றாம்.