பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 6127

கடையைக் காப்பான், இடையைக் காப்பான். தலையைக் காப்பான் - கடை இடை தலை என்பன உருபு ஏற்ற இடப்பெயர்.

முன் பிறந்தான் - முன்கண் பிறந்தான்.

பின் பிறந்தான் - பின்கண் பிறந்தான்.

தலைச்சென்றான் - தலைக்கண் சென்றான்.

தலைமழை - தலைக்கண் மழை.

கடைகாப்பான் - கடையைக் காப்பான்.

வலம்இரார் - வலத்தின்கண் இரார்.

மேலிருந்தான் - மேற்கண் இருந்தான்.

கீழிருந்தான் - கீழ்க்கண் இருந்தான்.

இவையாவும் உருபு தொக்க பெயராய் உள்ளன.

தலைக்கண் சென்றான் - தலை இடப்பொருட்டு; கண் உருபு.

இடைக்கண் முரிந்தார் (கு-423) - இடை இடப்பொருட்டு; கண் உருபு.

கடைக்கால் நின்றான் - கடை இடப்பொருளது; கால்உருபு.

மருங்கில் இருந்தான் - மருங்கு இடப்பொருளது; இல்உருபு.

[வி-ரை: இறுதி எடுத்துக்காட்டுக்களில் முதலில் வரும் ஏழன்உருபு பெயராகவும், அடுத்துவரும் ஏழன்உருபே உருபாகவும் வருதல் காணப்படும்].

உள்ளூர் மரம், கிணறு, தொழில், பிழைப்பு;

கீழ்நீர், மீன், முதலை, ஆமை;

மீகண், விழி, ஒளி, பாவை.

[வி-ரை: இவற்றுள் ஊருள் என்பது உள்ளூர் எனவும், நீர்க்கீழ் என்பது கீழ்நீர் எனவும், கண்மீ என்பது மீகண் எனவும் பின்னர் வரவேண்டிய உருபு சொல்லுக்கு முன்னே வந்தவாறு. இவையாயும் ஏழன்உருபுகளுக்குரிய சிறப்புச் செய்திகள்.