பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 7, 8129

ஆடிக்கு வந்தான் - ஆடிக்கு: இக்குச்சாரியை. ஆடித்திங்களின் கண் என்பது பொருள்.

சாரியையின் நீங்கிற்று, திரிந்தது, வேண்டும் - சாரியைஇன்: சாரியை ஆகிய ‘இன்’ என்பது.

அவனது செய்தான் - அவன் அது செய்தான். அது அதனை என்னும் பொருட்டு.

இவனது செய்தான் - இவன் அது செய்தான்.

அவன் கண் பதினைந்து - கண்: கண் என்னும் உறுப்பு.

நெற்றிக் கண் நெருப்பு - கண்: கண் என்னும் உறுப்பு.

அவன் தலை ஐந்து - தலை: தலை என்னும் உறுப்பு.

அவளிடை சிறிது - இடை: இடை என்னும் உறுப்பு.

இவன்கால் நெடிது - கால்: கால் என்னும் உறுப்பு.

அவன் கடைவெல்லாம் - கடை: அங்காடி என்னும் பொருளது.

அவன் வாயுரை - வாய்: வாய் என்னும் உறுப்பு.

இவன் புடைகொடிது - புடை: புடைத்தல் தொழில்.

[வி-ரை: இங்ஙனம் வடிவினால் வேற்றுமை உருபுகள் போன்ற சொற்கள், வேற்றுமை உருபுகள் போலப் பெயரையடுத்துவரின், பொருளால் தாம் வேற்றமை உருபுகள் அல்லவாதலை விளக்கிநிற்கும். செயற்கு என்பது அவ்வாய்பாட்டு வினையெச்சத்தினையும், நான்கன் உருபேற்ற செயல் என்ற தொழிற்பெயரையும் குறிக்கும். செயற்கு என்ற தொழிற் பெயரைப் பகுதியாகவும் குவ்வுருபாகவும் செயல் + கு எனப் பிரிக்கலாம்; வினையெச்சத்தைப் பிரித்தல் கூடாது என்பர் சேனாவரையர். தொல்-சொல். 40.] 7

வேற்றுமை என்பதன் மூவகைப் பொருள்

20உருபுஏற் றதனையும் உருபையும் உருபு
நோக்கிவந் ததனையும் வேற்றுமை என்பர்.