பக்கம் எண் :

152இலக்கணக் கொத்து 

ஆரியனும்தாயும் போதற்கு ஏவுதலால் ஏவுதல் கருத்தா.

மாணாக்கனும் மகளும் போதலை இயற்றுதலால் இயற்றுதல் கருத்தா.

பிரயோகவிவேகம் ‘மாணாக்கனை... ... ... ஆசிரியன், மகட் போக்கியதாய் என்புழி, மாணாக்கன் மகள் என்னும் இருவரும் தனித்தனியே போவாரும் போக்கப்படுவாரும் ஆதலின் கர்த்திரு கருமமாம்’ (12 உரை.) என்று கூறும் தொடருக்கு இலக்கணக் கொத்துரை விளக்கமாக அமைந்துள்ளது.

‘ஒத்தகிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பது 26ஆம் நூற்பா உரையுள் விளக்கப்பட்டது.] 19

செயப்படுபொருளுக்குப் புறனடை

32செயப்படு பொருள்இனும் செப்பின் பெருகும்                  20

கருவியின் வகைகள்

33*அகம்புறம் ஒற்றுமை ஆகும் கருவி

[வி-ரை: கருவி, அகக்கருவி. புறக்கருவி, ஒற்றுமைக்கருவி என மூவகைப்படும். ‘நண்ணிய காலை அகம்புறம் ஆகும் காரணங்களே’ எனக்கருவியை அகக்கருவி புறக்கருவி என இரண்டாகவே பகுத்த பிரயோகவிவேகம், அறிவான் அறிந்தான் என்பதனை ஏதுவின்கண் வந்த மூன்றாம் வேற்றுமை என்றே கூறும். (12 உரை) வீரசோழியமும் இரண்டே கூறும். (41).]

எ-டு: மனத்தான்நினைத்தான் - மனம் அகக்கருவி.

வாளால்வெட்டினான் - வாள் - புறக்கருவி.

அறிவான்அறிந்தான் - அறிவு அறிதலுக்கு ஒற்றுமைக்கருவி. 21


* நன்னூல் 297. முனிவர் உரை.