| வேற்றுமையில் - நூற்பா எண். 38, 39 | 169 |
இடத்தின்கண் பல உருபு வருதல் 50 | +ஒன்றுஇ ரண்டுநான்கு ஏழொடு இடம்எழும்.
|
எ-டு: தூண் போதிகை தொட்டது - முதல்; தூணைச் சார்ந்தான் - இரண்டாவது; இன்றைக்கு, நாளைக்கு, பகலைக்கு, அந்திக்கு, சந்திக்கு, மாலைக்கு, காலைக்கு, ஊர்க்கு, வீட்டிற்கு வருவன் - நான்காவது; தூணின்கண் சார்ந்தான் - ஏழாவது; என முறையே காண்க. [வி-ரை: தூணின்கண் போதிகை தொட்டது, துணின்கண் சார்ந்தான், இன்றைக்கண், நாளைக்கண், பகற்கண், அந்திக்கண், சந்திக்கண், மாலைக்கண், காலைக்கண், ஊர்க்கண், வீட்டின்கண் வருவன் என ஏழாவது விரித்துநோக்கி, ஏழாவதன் பொருட்கண் ஏனைய முதல் இரண்டு நான்குஆம் வேற்றுமைகள் வருமாறு காண்க. பகலை என்பது - பகல் என்பதன் வழக்குச்சொல்.] 38 இனி, முற்கூறிய பொது இலக்கணங்களுள் உருபும் உரிமையாய் நிற்றலும் ஆகிய ஈரிலக்கணமும் ஒருங்கேதோன்றவும், உருபுகள் தமக்கு உரிய பொருள் அல்லனவற்றையும் உணர்த்தல் தோன்றவும், வினைமுதல் முதலாகச் சிறப்புச்சூத்திரம் செய்கின்றோம். உருபு பொருள்தரும் வரையறை 51 | ஓர்உரு பிற்குஓர் பொருளே உரிமை வேறு பொருளையும் விளம்பும் என்க.
|
இவ்விரு விதியும் தத்தம் சிறப்புச்சூத்திரத்துட் காண்க.
+ நன்னூல்317. முனிவர் உரை. |