பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 2179

1முதல்நிலைத் தனிவினை முதல்நிலைத் தொழிற்பெயராதல்

‘அறிகொன்று அறியான்’ (கு. 638) - [அறி - அறிதல்]

‘கெடுவாக வையாது உலகம்’ (கு. 117) - [கெடு - கெடுதல்]

‘அங்கா முயற்சி’ (ந. 87) - [அங்கா - அங்காத்தல்]

- இவற்றுள் முதல்நிலை தானே தொழிற்பெயராய் நின்றவாறு காண்க.

2முதல்நிலைத் தனிவினை முன்னிலைஏவல் ஒருமைமுற்றாதல்

‘செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.’                                      - (கு. 1151)

‘என்னைக்கு மாரற்கு இயம்பு.’

- இவற்றுள் உரை, இயம்பு என முதல்நிலைத் தொழிற்பெயர் முன்னிலை முற்றாதல் காண்க.

3*முதல்நிலைத் தனிவினை வேறுவினை முற்றாதல்

‘உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் ’                                    - (கு. 813)

‘ஏ எ நிகர்அவற் றுள்ளே ஏகமும்
ஓ ஒ நிகர்அவற் றுள்ளே ஒன்றும்
புள்ளி கொள்ளலைத் தள்ளா வாகும் ’

- இவற்றுள், நேர், நிகர் என்னும் முதல்நிலைத் தனிவினைகள் நேர்வர், நிகர்க்கும் என வேறுவினை முற்றாய் வந்தமை காண்க. [நேர்வர் - பலர்பால் வினைமுற்று; நிகர்க்கும் - செய்யும் என் முற்று. ‘உறுவது....நேர்’. நேர் - நேர்வர் - நன். 351 விரு.]

4அ.முதல்நிலைத் தனிவினை பெயரெச்சமாதல்

பொருபடை, கொல்களிறு - இவை பொருகின்ற படை, கொல்கின்ற களிறு எனப் பெயரெச்சமானது காண்க.


+ நன்னூல் 351. முனிவர் உரையில் எடுத்தாளப்பட்டுள்ளன.