| வினையியல் - நூற்பா எண். 7 | 201 |
எ-டு: ஆட்டினான், ஊட்டினான் - இவை போல்வன முதல் நிலை திரிந்தன. (ஆடு-ஆட்டு, உண்-ஊட்டு எனத்திரிந்தன.) அரசன் கட்டின கோட்டை - கட்டுவித்த; அரசன் வெட்டின குளம் - வெட்டுவித்த; அரசன் செய்த தேர் - செய்வித்த; கோழி கூவிப் போது புலர்ந்தது - கூவுவித்து; உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யா (குறுந். 232)-எஞ்சுவித்த; குடிபொன்றிக், குற்றமும் ஆங்கே தரும் (கு. 171) - பொன்றுவித்தது; குடிமடிந்து குற்றம் பெருகும் (கு. 604) -மடிவித்து; -இவை முதல்நிலை திரியாதன. [வி-ரை: முதல்நிலைதிரியாதன என்பது தன்வினை பிறவினை வாய்பாடாகத் திரியாது தன் வினையாகவே நின்று பிறவினைப் பொருளைத் தந்தன என்பது. பிரயோகவிவேகம்35ஆம் நூற்பா உரையுள், ணிச்-அந்தமாவது ஏவுவான் வினையும் இயற்றுவான் வினையும் உடனே தோன்றும் ஏவற்கருத்தாவின் வினை. ஆற்றின் ஒழுக்கி (கு. 48), கேளிர்ப் பிரிப்பர் (137), தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி (தொ. சி. பா.) ஊட்டு, தீற்று, ஆட்டு, கூட்டு, தேற்று என வி - பி இன்றித் திரிந்து, ஒற்றுப்பெற்றும் வரும் சகச ணிச் அந்தம். ‘தெளித்த சொல் தேறியார்’ (கு. 1154) - தெளிவித்த சொல் தேறியார்; அரசன் எடுத்த ஆலயம் - அரசன் எடுப்பித்த ஆலயம்; இவ்வயல் உழுத அந்தணன் - உழுவித்த அந்தணன்; ‘காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு - காடு கொல்வித்து நாடு ஆக்குவித்துக் குளம் தொடுவித்து; |