| ஒழிபியல் - நூற்பா எண். 28 | 297 |
பொழுது என்பது போழ்து போது என்றும், ஞெண்டர் என்பது ஞெண்டு, ஞண்டர், ஞண்டு, நண்டு, நெண்டு என்றும், தெங்கின்காய் தேங்காய் என்றும் இன்னும் இவைபோல ஒரு காரணமும் இன்றியே வரும் விகார மெல்லாம் இவ்விரு சூத்திரத்துள் கூறிய எண் விதியுள் அடக்கிக் கொள்க. [வி-ரை: பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட என்பதை வடமொழி விதியால் பருகிப் பைதல்நோய் எல்லாம் கெடுவேன் என்று மாற்றிப் பொருள் கொள்ளல் வேண்டும் என்பதே சிறப்பு. நாளை வைத்து வழுக்கினுள் எடுக்கும் என்பதே ஏற்றது. யாதானுமொரு காரணம் - அவாய்நிலை, சொல்லெச்சம், இசையெச்சம், குறிப்பெச்சம் முதலியவற்றுள் ஒன்று. தொல்காப்பியர் கூறிய விதிப்படி நீஇர் என்பதே சொல். இகரத்தை அளபெடையாக மயங்கி நீர் என்பதனைச் சொல்லாக்கினர். எவன் என்பது ஈண்டு அஃறிணைப் பொதுக்குறிப்பு முற்று; உயர்திணை ஆண்பாற் பெயரன்று.] ‘வேர்த்து வெகுளார் விழுமியோர்’ - நாலடி. 64 ‘கொழுநற் றொழுது எழுவாள்’ - கு. 55 ‘தொழுது எழுவார் வினைவளம் நீறெழ’ - கோவை. 118 என்புழி வெகுண்டு வேரார் - எழுந்து தொழுவாள் - எழுந்து தொழுவார் என முன் பின்னாகப் பிறந்தது. வடநூலாரும் வாய் பிளந்து உறங்கினான், குறட்டைவிட்டு உறங்கினான், கொடுத்திரந்தான் எனவும் காட்டுவர்.
‘வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து’ - கு. 776 ‘பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட’ - கு. 1266 இவையும் முன் பின் பிறந்ததாக அமைக்க.’’ - பி. வி. 39 உரை. |