| ஒழிபியல் - நூற்பா எண். 29, 30 | 299 |
ஆந்தை - கொற்றங் கொற்றன் - இவற்றுக்கு ‘இயற் பெயர் முன்னர்’ (தொ. எ. 347) ‘ஆதனும் பூதனும்’ (தொ. எ. 348) என்ற தொல்காப்பிய விதிகளையும் ‘வல்லொற்றுவரினே’ (ந. 371) என்ற நன்னூல் விதியையும் கொள்க. அகங்கை - அங்கை. இதற்கு ‘அகம் என் கிளவிக்கு’ (தொ. எ. 315) என்ற தொல்காப்பிய விதி கொள்க. அக்கரச் சுதகம் அக்கர வருத்தனம் ஆகிய பாலாறு - கா என்பனவும், ஆந்தை பூந்தை முதலியனவும் பிரயோகவிவேகம் 26ஆம் காரிகை உரையுள் விளக்கப்பட்டுள்ளன.] 29 ஒருசாரார் கருத்து 116 | காரணம் அதனையே இடுகுறி யாகவும் இடுகுறி அதனையே காரண மாகவும் பலசொல் லினையே ஒருசொல் லாகவும் ஒருசொல் லினையே பலசொல் லாகவும் கருதுவர் ஒரோவழிக் கற்றறிந் தோரே.
| |
எ-டு: கரிகரம், பணிபணம், வேலன் வேல்- இவற்றுள் யானை, பாம்பு, முருகன் என இடுகுறியாகவே பொருள் கொள்வர். இஃதன்றியும். பிறைசூடி, சக்கரபாணி, கணபதி, சூரனைவென்றான், சிவகாமி, மலர்மாது, உலக மாதா, தெய்வயானை. இக்காரணப்பெயர்களை ஒரு மகனுக்கும் ஒரு மகளுக்கும் ஓர் எருத்திற்கும் ஒரு பசுவிற்கும் பொருத்தி இடுகுறிப்பெயர் என்றே கொள்வர். ‘மொழிப்பொருட் காரணம்’ (தொ. சொ. 394) என்ற சூத்திரத்தில் இடுகுறிகளை எல்லாம் காரணமாகக் கொண்டது காண்க. |