காதறை - இரண்டும் பெறாது; வில்லன்[ வில்லி - இரண்டும் பெறும்; இத்தன்மை நோக்கி என்க. இனி, பதத்தோடு ஐவகை இடைச்சொற்களும் பொருந்தல் தொடர்மொழி அன்றோ? பகுபதம் என்றது என் எனின், குழையன் எனவும், சாத்தனது ஆடை - ஆடை சாத்தனது எனவும், பவளம் போல் வாய் - வாய் பவளம் போலும் எனவும், உண்ணாநின்று எனவும், கோன் எனவும் வருவனவற்றிற்குப் பலர் உரைகளானும், முற்றக் கற்ற பெரியோரைக் கேட்டலானும், தொடர்மொழி அன்று என்பது தெளிக. நன்நூலார் பதத்தோடு இடைச்சொல் பொருந்தலைப் பகுபதம் முடிப்புழித் தனிமொழி என்றும், அவ்வழிப் பதினான்கனுள் தொடர்மொழி என்றும் அங்ஙனம் அல்வழிச்சந்தி என்றும், உருபியலில் வேற்றுமைச்சந்தி (ந. 242) என்றும், ‘அஇஉ-முதல் தனிவரும்’ (ந. 66) என்றும், ‘குறிப்பு என் எண் பகுதியில் தனித்தியல் இன்றி’ (ந. 420) என்றும் இன்னும் பல இடங்களிலும் பலவழிப்படக் கூறினார். தொல்காப்பியரும் அது. வடநூலாரும் அது’ ஆகையால் ‘முற்றக்கற்ற பெரியோரைக் கேட்’க என்றாம். யாம் சில அறிந்தனவற்றை விரிக்கின் மிகவும் பெருகும் என்க. [வி-ரை: நன்னூலார் தனிமொழி என்றது, ‘பகுதி விகுதி இடைநிலை சாரியை’ (133.) ‘இலக்கியம் கண்டதற்கு’ (141) முதலிய நூற்பாக்களில் காண்க. அல்வழிச்சந்தி என்றது, ‘வேற்றுமை ஐ-முதல்’ (152). என்னும் நூற்பாவில் ‘அல்வழி ... ....இடைஉரி தழுவுதொடர் அடுக்கு என ஈரேழே’ (ந. 152) என்று குறித்ததனை உட்கொண்டு. உருபியலில் வேற்றுமைச்சந்தி என்றது, |