நால்வகைச் சந்தி 118 | வேற்றுமை வழியோடு அல்வழி அன்றியும் அவ்விரு வழியும் அடங்கும் பொதுவழி அம்மூன் றுள்ளே அடங்கா வழியும் எனநான்கு என்றே இயம்புவர் சந்தி.
|
பொதுவழி கொண்டது என்எனின் - பொதுத்திணை, பொதுப்பால், பொதுப்பெயர், பொதுவினை, பொதுக்காலம், பொது எச்சம், பொது முற்று, பொது இடம் முதலியவற்றைத் தேர்ந்து கொள்க. [வி-ரை: பொதுத்திணை - உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய்ச் சொல்லமைப்பில் உள்ளது. சாத்தன் பொதுத்திணை. அது வந்தான் என்ற வினை கொண்டு முடியின் உயர்திணை ஆகும்; வந்தது என்ற வினை கொண்டு முடியின் அஃறிணையாகும். பொதுப்பால் - ஆண், பெண், இரண்டனையும் சுட்டும் தெய்வம் முதலிய சொற்கள் பொதுப்பாலாம். பொதுப் பெயர் | - | ஒரு சாதிக்குப் பொதுவாக அமைந்த மரம் முதலிய பெயர்கள், தென்னை முதலியன சிறப்புப் பெயர்களாம். | பொது வினை
| - | இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாகிய வேறு - இல்லை - உண்டு - யார் -வேண்டும் - தகும் - படும் முதலியன. | பொதுக்காலம் | - | வேறு இல்லை உண்டு முதலிய பொதுவினைகள் முக்காலங்களுக்கும் பொதுவாய்க் காலத்தைக் குறிப்பாகக் காட்டலின் இவை குறிப்பிடும் காலம் பொதுக் காலம். |
ஏனைய இவ்வாசிரியராய் விளக்கப்பட்டுள்ளன.] |