| ஒழிபியல் - நூற்பா எண். 32, 33 | 323 |
இவை யாவும் தழாத் தொடராய் அல்வழிக்கண் அடங்கும் என்ப.] இனி, பொதுத்திணை முதலைந்தும் வெளிப்படை. ஏனைய மூன்றும் வருமாறு. ஓடிய சாத்தன், ஓடிய வந்தான் - பொது எச்சம். (செய்த என்னும் பெயரெச்சமும், செய்யிய என்னும் வினையெச்சமும் ஓடிய என்ற ஒரே வடிவு கொண்டன.) செய்யும் என்பது பொதுமுற்று. இவன் சொன்ன சொல் என்பது தன்மைக்கும் முன்னிலைக்கும் படர்க்கைக்கும் பொது இடம். (தன்னைப் பிறன்போல் கூறும் வழியும், முன்நின்றானை வெறுப்பு முதலியவற்றால் பிறன் போலக் கொள்ளும் வழியும் இவன் என்ற படர்க்கைச் சொல் தன்மை முன்னிலைக்கண்ணும் வந்தவாறு.] தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மையும், முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலையும் பொது இடம் என்றலும் ஒன்று. [தன்மைப்பன்மை முன்னிலை படர்க்கை இரண்டனையும் உளப் படுக்கும். (ந. 332) முன்னிலைப்பன்மை படர்க்கையை உளப்படுக்கும். (ந. 332) என அறிக.] அடங்காவழிச் சந்தியை விரிக்கின் பெருகும் என்க. 32 வேற்றுமை வழிச்சந்தி 119 | வற்றுமை வழிஈ ரெட்டாய் விரியும், மூவெட்டு என்று மொழியவும் பெறுமே; ஏனைமூ விரியும் இயல்பில் பெருகும்.
|
எ-டு: சாத்தன் வந்தான், சாத்தான் ஆனவன் வந்தான்; குயில் வாராய்; குயிலே வாராய். ஒழிந்த பன்னிரண்டும் (ஆறுதொகை, ஆறுவிரி) வெளிப்படை, |