| ஒழிபியல் - நூற்பா எண். 34 | 325 |
எ-டு: ‘அரியானை, அந்தணர்தம் சிந்தையானை’ - தேவா. இது ஒன்று பல அடுக்கல் - (இரு பெயரும் ஒரு பொருளையே குறிப்பன.) வாளான் மருவாரை வழிக்கண் வெட்டினான். இது வேறு பல அடுக்கல். (உருபுகள் பலவும்) ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று’ - கு. 110 இது விதியாய் அடுக்கல். (விதி எச்சங்கள்) ‘புரைதீரா மன்னா இளமை’ ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ - கு. 448 ‘ஏவவும் செய்கலான் தான்தேரான்’ - கு. 848 இவை மறையாய் (ஒன்றுபல) அடுக்கல். 5 | விதிமறை கூடி விரவி அடுக்கல்
|
சாத்தனைக் கண்டு கொற்றனைக் காணாது வந்தான். சோறுஉண்டு கைகழுவாது வந்தான். இவை (ஒன்று விதியாகவும் ஒன்று மறையாகவும்) விரவி அடுக்கல். |