பக்கம் எண் :

212இலக்கணக் கொத்து 

கற்கப்படு மாணாக்கன் - கற்கும் மாணாக்கன்;

கற்கப்படா மாணாக்கன் - கற்கா மாணாக்கன்;

எனப் படுசொற்குப் படுபொருள் வாராமை உணரப்படும்]

6பெயர்பின் வினையெச் சத்தின் பின்னர்ப்
படுசொல் வந்தே வேறுபொருள் பட்டும் இயலும்

எ-டு:

‘மறை இறந்து மன்று படும்’                                        - கு. 1138

‘போற்றினும் பொத்துப்படும்’                                        -கு. 468

‘சொற்பொருள் சோர்வு படும்’                        - (கு.1046)பெயர்ப்பின் படு;

‘துன்பங்கள் சென்று படும்’               - (கு. 1045) வினையெச்சத்தின் பின் படு.

இவற்றுள் இரண்டன் பின்வரும் உண்டாம் என்றே வேறு பொருள்பட்டது காண்க.

‘இலம்படு புலவர் ஏற்றகை நிறைய’                              - மலைபடு 576

என்பதும் அது.

இனைத்தென அறிந்த பொருட்கு உம்மை படும்;

இன்என் உருபிற்கு இன்என் சாரியை இன்மை படும் - இரண்டும் பெயர்ப்பின் படு.

‘ஒளியோடு ஒழுகப்படும்’                                          - கு. 698

‘வஞ்சரை அஞ்சப்படும்’                                           -கு. 824

மெய் சொல்லப்படும்.

ஆசை நீக்கப்படும் - இவை வினையெச்சத்தின் பின் படு.

இவற்றுள் இரண்டன் பின்னரும் வேண்டுவது தக்கது என்றே வேறு பொருள் பட்டது காண்க. இதனை,

‘வேறில்லை உண்டியார் வேண்டும் தகும் படும்’                          - (85)

என்னும் சூத்திரத்தினும் விளக்குதும்.