பக்கம் எண் :

214இலக்கணக் கொத்து 

9படுசொல் வந்தேபடுபொருளாயும் பயிலும்

நாய் கோட்பட்டான்; புலி கவ்வப்பட்டான் - இவற்றுள் படுசொல்லைத் தடுப்பினும் தடைபடாதே வந்து பொருந்திப் படு பொருள் வந்தது காண்க.

[வி-ரை: தடுப்பினும் தடைபடாது வருதல் - தொகுக்க முயலினும் தொகாது வெளிப்பட்டே வருதல்.

‘‘அரம் பொருத பொன்’ (கு. 888), ‘தாம் வீழ்வார்’ என்பன போலக் ‘கேள்வி தோளாதசெவி’, ‘முகடி மூடினார்’ என வாராது சிறு பான்மை ‘கேள்வியால் தோட்கப்படாத செவி’ (கு. 418), ‘முகடியான் மூடப்பட்டார்’ (கு. 936) என வரும்’’ பிரயோக விவேகம் - 37 உரை]

‘இன்னும் பலவாய் இயலும் என்ப’

‘இன்னும் பல

என்றதனால்,

எம்மால் வீழப்பட்ட திருநுதற்கு இல்லை இடம்;

தம்மால் வீழப்பட்ட தலைவியுடைய மென்தோள்;

-இவற்றை ‘யாம் வீழும் திருநுதல்’ (கு. 1123), தாம் வீழ்வார் மென்தோள் (கு. 1103) எனத் தொகுக்க வேண்டின் தொகுக்கலாம், வேறு பொருள் படாது ஆதலான்,

‘கேள்வியால் தோட்கப்படாத செவி'                                 - கு. 418

‘முகடியான் மூடப்பட்டார்’                                         - கு. 936

இவற்றைக் கேள்வி தோளாத செவி - முகடி மூடினார் - எனத் தொகுக்க வேண்டின் தொகுக்கப்படாது, வேறு பொருள்படுதலின்.

[வி-ரை: தாம் வீழ்வார் மென்தோள், யாம் வீழும் திருநுதல் என்பன இவ்வாறே பிரயோக விவேகம் 37 ஆம் காரிகை உரையிலும் விளக்கப்பட்டுள்ளன.