பக்கம் எண் :

216இலக்கணக் கொத்து 

பாங்கி ஊடல் தீர்த்தாள் - பிறர்க்குப் பயன்.

தலைவி தலைவனுக்குச் சோறு அட்டாள்;

தலைவன் தலைவியைப் புணர்ந்தான் - தனக்கும் பிறர்க்கும் பயன்.

பயனில் சொல் பாராட்டினான்;

கையை வீசினான்;

கண்ணை இமைத்தான் - தனக்கும் பிறர்க்கும் பயன் சார்பில; -என முறையே சிற்றறிவோர் வினை நான்கும் காண்க.

யான் எனது என்னும் செருக்கு அறுத்தான்.

அவாவை விட்டான்;

பிறவியை ஒழித்தான்.

வீட்டை அடைந்தான் - தனக்குப் பயன்.

நூலைப் பாடினான்.

உரையை எழுதினான்.

மாணாக்கனை அறிவித்தான் - பிறர்க்குப் பயன்.

வேதாகம வழி விரும்பி ஒழுகினான்.

இரக்கத்தொடு பலி இரக்கத் தொடுத்தான்.

அரனது விழாவை மிக அலங்கரித்தான்.

சிவனது பூசையை மிகச் சிறப்பித்தான் - இருவருக்கும் பயன்.

அறம்பொருள் இன்பம் அளவின்றித் தேடினான்.

அட்டமா சித்தியை அருமையாய்த் தேடினான் - இருவருக்கும் பயனில.

- என முறையே பேரறிவோர்வினை நான்கும் காண்க.