பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 31309

இவற்றைப் பிரித்துப் பகுக்காது பகாப்பதமாகவே கொள்க என்பது. (பி. வி. 32 உரை) காண்க. இவை பகுபதமாகக் கொள்ளின் ‘பெயர்தான் அறுவகையாகப் பிரிதலும்’ என்பதனுள் அடங்கும்.]

12வினைக்குறிப்பு முற்று வினைகுறிப் புப்பெயர்
இருவகை எச்சம் எனப்பெயர் பெற்றும்

[வி-ரை:

பகுபதம் குறிப்புவினைமுற்று, குறிப்புவினையாலணையும் பெயர், பெயரெச்சம், வினையெச்சம் என்ற பகுப்புக்களையும் பெறும்.

அவன் நல்லன் - குறிப்பு வினைமுற்று.

நல்ல வந்தன - குறிப்பு வினையாலணையும் பெயர்.

வந்த சாத்தன் - பெயரெச்சம்.

வந்து போனான் - வினையெச்சம்.

நல்லன், நல்ல, வந்த, வந்து என்பன பகுபதமாதல் உணரப்படும்.]

13பகாப்பதப் பொருள்படப் பகுபதம் ஆகியும்

‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து’                                   - கு. 221

‘மாதர் மனைமாட்சி யான்’                                     - நாலடி. 382

‘வண்ண வண்டின் குரல் பண்ணைபோன்றனவே’                       பரி. 14-4

‘நுனிக் கொம்பர்’                                                - கு. 476

‘நத்தம் போல் கேடும்’                                           - கு. 235

‘சோதி வாயவும் கண்ணவும் சிவந்தன’

‘வானம் துளங்கில் என்’                                           - தேவா.

‘இருவயின் பெயரொடும்’                                            - ந. 89

‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்’                  - தொ. சொ. 156.