பக்கம் எண் :

324இலக்கணக் கொத்து 

சாத்தனை எனப் பதத்தோடு உருபு புணர்தலைச் சிலர் வேற்றுமைச்சந்தி என்று கொள்ளாமையின் மூவெட்டு என்றிலம். அவர்க்கு அவை எங்ஙனம் அடங்கும் எனின், பகுபதத்தில் அடங்கும் என்க. அக்கருத்து வடநூலினும் அறிக.

[வி-ரை: சாத்தன் வந்தான் - முதல் வேற்றுமை தன் உருபு வெளிப்படாமல் வந்தது.

சாத்தன் ஆனவன் வந்தான் - முதல் வேற்றுமை - ஆனவன் என்ற தன் உருபு வெளிப்பட்டே வந்தது.

குயில் வாராய்-விளிவேற்றுமை தன் உருபு வெளிப்படாமல் வந்தது.

குயிலே வாராய் - விளிவேற்றுமை தன் உருபு வெளிப்பட்டே வந்தது.

ஆனவன் முதலியன முதல்வேற்றுமை உருபு என்பதும், ஈற்றில் ஓரெழுத்து மிகுதல் முதலியன விளிவேற்றுமை உருபு என்பதும் அறிக.

உருபுகளை நிலைமொழியின் ஒரு கூறாகவே கொண்டு, அந்நிலைமொழி வருமொழியோடு கூடும் பொருள்தொடர்பு பற்றியே அல்வழி வேற்றுமை என்ற பொருள்களைக் கோடலே இலக்கண ஆசிரியர்களிடத்துப் பெரும்பான்மையும் அமைந்துள்ளது.] 33

அடுக்கின் வகைகள்

120வபெயர்முற்று எச்சமொடு உருபுஐந்து அடுக்கே;
இரட்டைக் கிளவியோடு இருமூன்று; அவைதாம்,
ஒன்றுபல அடுக்கல்1, வேறுபல அடுக்கல்2,
விதியாய் அடுக்கல்3, மறையாய் அடுக்கல்4,
விதிமறை கூடி விரவி அடுக்கல்5,
பலசொல் கூடிஓர் பொருளாய் அடுக்கல்6,
பலபொருட் கேஒரு சொல்லாய் அடுக்கல்7,
இருவகை தமக்கும் பொதுவாய் அடுக்கல்8,
இயல்பாய் அடுக்கல்9, விகாரமாய் அடுக்கல்10,
ஆதியாப் பலவும் அறைகுவர் புலவர்.