பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 45, 46349

‘கடுமொழியும்.............அரம்’ - (கு. 567) என்புழி, அரம் என்னும் ஒருமைப் பெயரை வாக்கிய பேதமாகத்தனித்தனி கூட்டி முடிப்பதனைக் தேர் வடம் இழுப்பார்போலப் ‘பிரத்யேக பந்தாந் நுவயம்’ என்பர்’’ என்று குறிப்பிட்ட செய்திகளை இவ்வாசிரியர் உட்கொண்டுள்ளமை காண்க.] 44

நூற்புறனடை

131இலக்கணம் இலக்கியம் உரைஎனப் பெயர்பட்டு
இருக்கும் என்று எண்ணுக செய்யுளின் இயல்பே.

இலக்கணமும் உரையும் செய்யுளாமோ எனின்,

‘சூத்திரம் குறித்த யாப்பிற் றாகும்’

‘பல்வகைத் தாதுவின்’                                            - ந. 268

‘நூற்பா அகவல்’

எனப் பலரும் ஓதுதலானும்.

‘சூத்திரமும் செய்யுளாகலின்’

என நச்சினார்க்கினியர் எழுதுதலானும்,

[இப்பாயிரமும் செய்யுளாகலின் இங்ஙனம் மாட்டுறுப்பு நிகழக் கூறினார். தொ. சி. பா. நச்.]

‘விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும்’ (பரி. உரை)

‘பொருப்பு வில்லபா விருப்பம் இவரே’

என வாசகங்களைச் செய்யுள் உறுப்புத்தோன்ற எழுதுதலானும்,

உண்டான் தின்றான் ஓடினான் பாடினான்’

என உதாரணங்களை அவ்வுறுப்புத்தோன்ற எழுதுதலானும் இலக்கணச் செய்யுள் - இலக்கியச்செய்யுள் - உரைச்செய்யுள் -