| பாயிரவியல் - நூற்பா எண். 6 | 77 |
பொருளோ அன்றோ என்றும், இதுவோ அதுவோ பொருள் என்றும் பல பொருள்படுதலின், அவரவர் கருத்திற்கு அகப்பட்ட பொருளையே கூறுவர். இக்கருத்து எல்லா வாசகங்கட்கும் பொது. இனிச் சூத்திரங்கட்குப் பொருள் கொள்ளுதல் எளிது; உரை வாசகங்கட்குப் பொருள் கொள்ளுதல் அரிது என்பது தோன்ற, ‘நோக்காது உரைக்குவர், அறியாது கூறுவர்’ என்றாம். [வி-ரை: இச்சூத்திரத்திற்கு இதுவே பொருள் - ஏகாரம் தேற்றமாய் எடுத்து ஒலிக்கப்படின் இதுபொருள் என்றும், ஏகாரம் வினாவாய் ஒலிக்கப்படும் இது பொருள் அன்று என்றும், ஏகாரம் வினாவாய்ப் பொருள் என்பது எடுத்து ஒலிக்கப்படின் இது பொருள் அன்றோ என்றும், ஏகாரவினாவும் பொருள் என்ற சொல்லும் எடுத்து ஒலிக்கப்படின் இதுவோ அதுவோ பொருள் என்றும் அத்தொடர் ஒலிஎழுத்தை நோக்கிப் பொருள்தரும். ஆனால் வரிவடிவில் எல்லாப் பொருள்களையும் ஒரே தொடரே குறிப்பிட வேண்டுதலின், அவ்வொரு தொடருக்கே இத்தனைப் பொருள்களையும் ஒவ்வொருவர் ஒவ்வொருகருத்துப்படக்கூறுதற்கு வாய்ப்பு உண்டு பெரும்பாலும் நூற்பாக்கள் இத்தகைய ஐய உணர்வுக்கு இடம்இன்றி யாக்கப்படும். உரைநடையாய் அமையும் உரையில் ஐயஉணர்வை அடியோடு அகற்றுமாற்றான் சொற்றொடர்களை அமைத்தல் அத்துணை எளிமைத்தன்று. ஆதலின் உரை வாசகங்கட்குப் பொருள் கொள்ளுதல் அரிது என்பது கூறப்பட்டது. ‘உரையின்றிச் சூத்திரம்தானே பொருள் புலப்பட்ட காலமும் உண்டு; அஃதுஇன்றி அமையாது இக் காலத்தார்க்கு’ என்று பேராசிரியர் மரபியலில்குறிப்பிட்டுள்ளதன் கருத்து சூத்திரம் உரையின்றிப் புலப்படும் வகையிலேயே தொடக்கத்தில் யாக்கப்பட்ட செய்தியை வலியுறுத்தும்.] 9. ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே மூன்றும்திரிபு, மூன்றும்விகாரம்; அஃறிணை இயற்பெயர், பால்பகா அஃறிணைப்பெயர் - இவைபோல்வன விதி ஒன்றற்கே பலபெயர். [வி-ரை: மெய்பிறிது ஆதல் மிகுதல் குன்றல்என்று இவ்வென மொழிப திரியு மாறே’ - தொ. எ. 109 |